ஆந்திராவில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு.. நான் உங்கள் மகன்.. ரிலையன்ஸ் ஆனந்த் உருக்கம்!

Anant Ambani: ஆந்திராவில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Published on: October 3, 2026 at 1:44 pm

அமராவதி, அக்.3, 2026: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அதன் செயல் இயக்குநர் அனந்த் அம்பானி தெரிவித்துள்ளார். மதனப்பள்ளியில் நடைபெற்ற ராயலசீமா தோட்டக்கலை மையம் மற்றும் இந்திய வேளாண் பள்ளி அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அவர், சுருக்கப்பட்ட உயிரி எரிவாயு (CBG) ஆலைகளை அமைக்க இந்த முதலீடு மேற்கொள்ளப்படும் என்றார்.

இந்தத் திட்டங்கள் மூலம் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், அடுத்தடுத்த ஆண்டுகளில் மாநிலத்திற்கு சுமார் ரூ.60,000 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் அனந்த் அம்பானி தெரிவித்தார். விவசாயக் கழிவுகள் உள்ளிட்ட உயிரி மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் CBG, தூய்மையான எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க உதவும் என்றும் அவர் கூறினார்.

“நான் உங்கள் மகன்”

தொடர்ந்து இந்த விழாவில் பேசிய ஆனந்த் அம்பானி, “நான் உங்கள் மகன்” என எளிமையாக பேசினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் பிரபலமாகி வருகின்றன.

இதையும் படிங்க : இ.பி.எஃப் உறுப்பினர்கள் இ.பி.எஸ் திட்டத்தில் இணைய வாய்ப்பு; புதிய ஊதிய வரம்புக்குள் இருப்பவர்கள் யார்?

இ.பி.எஃப் உறுப்பினர்கள் இ.பி.எஸ் திட்டத்தில் இணைய வாய்ப்பு; புதிய ஊதிய வரம்புக்குள் இருப்பவர்கள் யார்?
New EPS Scheme

இ.பி.எஃப் உறுப்பினர்கள் இ.பி.எஸ் திட்டத்தில் இணைய வாய்ப்பு; புதிய ஊதிய வரம்புக்குள் இருப்பவர்கள்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com