இயக்குனர் மிஷ்கின்- நடிகை கீர்த்தி காம்பினேஷன்.. சத்யவான் சாவித்திரி.. நவ.20 வெளியீடு!

Sathyavan Savithri: சத்யவான் சாவித்திரி படம் நவம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published on: October 3, 2026 at 1:08 pm

சென்னை, அக்.3, 2026: கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படம் நவம்பர் 20-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

பிரவீன் எஸ். விஜய் இயக்கியுள்ள இந்தப் படம் நீதிமன்றத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ளது. முன்னதாக ஜூலை 24-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தில் கீர்த்தி சுரேஷும் மிஷ்கினும் வழக்கறிஞர் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் ஒரு முக்கியமான வழக்கை கையில் எடுக்க, அதைத் தொடர்ந்து அவரது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை மையமாகக் கொண்டு கதை நகர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிஷ்கின், கீர்த்தி சுரேஷின் மூத்த வழக்கறிஞராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் பாலசரவணன், சாருகேஷ், ஷில்பா மஞ்சுநாத், மதுசூதனன், ஆர்.சுந்தர்ராஜன், பிரிகிடா, மாலா பார்வதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.

இதையும் படிங்க : பல ஆண்கள் தியாகம் செய்கிறார்கள்.. டோரத்தி ரிஷிகாந்த்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com