சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை.. வழக்கின் விவரம் என்ன?

Savukku Shankar: பிரபல யூ-ட்யூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது; இந்த வழக்கின் விவரம் குறித்து பார்க்கலாம்.

Published on: September 30, 2026 at 12:57 pm

சென்னை, செப்.30, 2026: செய்தி வாசிப்பாளர்- வழக்கறிஞர் மகாலட்சுமி குறித்து அவதூறான கருத்துகளை வெளியிட்டு, அவரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு மகாலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது. தனது ‘சவுக்கு’ இணையதளத்தில் தன்னைப் பற்றி சவுக்கு சங்கர் அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

மகாலட்சுமி தரப்பில் நடைபெற்ற வாதத்தில், சவுக்கு சங்கர் திட்டமிட்டு தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதுடன், மிரட்டலும் விடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.

இதனிடையே, சவுக்கு சங்கர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிக்கப்பட்டது. மேலும், வழக்கில் தன்னை குற்றவாளியாக நிரூபிக்கும் வகையில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் அவரது தரப்பில் வாதிடப்பட்டதாக கூறப்படுகிறது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு வழங்குவதற்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சிவசக்தி முன்னிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பெண்களைத் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் சவுக்கு சங்கர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தீர்ப்பைத் தொடர்ந்து, சவுக்கு சங்கர் தரப்பில் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதால் அதற்கான அவகாசம் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக 30 நாட்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். இதனால், இந்த வழக்கின் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மீண்டும் விசாரணை வளையத்தில் அன்பில் மகேஷ்.. 5 மணி நேரம் சோதனை!

கர்நாடக முதல்வரை பார்த்து பயமா? தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்ட தாய்மாமா? எடப்பாடி பழனிச்சாமி!
Edappadi Palaniswami

கர்நாடக முதல்வரை பார்த்து பயமா? தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்ட தாய்மாமா? எடப்பாடி பழனிச்சாமி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com