Immanuel Sekaranar Memorial Day: இம்மானுவேல் சேகரனார் நினைவுதினத்தை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
Immanuel Sekaranar Memorial Day: இம்மானுவேல் சேகரனார் நினைவுதினத்தை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

Published on: September 11, 2026 at 6:22 pm
ராமநாதபுரம், செப். 11, 2026: தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் அவரது நினைவைப் போற்றி வருகின்றனர். இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள இம்மானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக அமைச்சர்களான நிர்மல் குமார், அருண்ராஜ், பிரபு, மதன் ராஜா, ராஜீவ், விக்னேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் அரசு சார்பில் மரியாதை செலுத்தினர். முதலில் இம்மானுவேல் சேகரனாரின் புதிய மணி மண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பரமக்குடியில் குவிந்த போலீசார்
இம்மானுவேல் சேகரனார் நினைவுதினத்தையொட்டி தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களும் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளனர். முக்கிய அரசியல் தலைவர்கள் வருகை தர உள்ளதால் பரமக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வருகையை கருத்தில் கொண்டு அப்பகுதியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
இம்மானுவேல் சேகரனார் நினைவுதினத்தை முன்னிட்டு பரமக்குடியில் இன்று அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்த உள்ளனர். இதனால் பரமக்குடி பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சா.. 2 நேபாள இளைஞர்கள் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com