UGC NET Answer Key: யுஜிசி நெட் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு இந்த வாரம் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.
UGC NET Answer Key: யுஜிசி நெட் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு இந்த வாரம் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.

Published on: August 11, 2026 at 1:33 pm
புதுடெல்லி, ஆக.11, 2026: யுஜிசி நெட் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு இந்த வாரம் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தேர்வுக்கான விடைக்குறிப்பு 30 நாட்களை கடந்தும் வெளியாகாமல் இருந்த நிலையில், இப்போது வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.
யுஜிசி நெட் தேர்வு, கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் முனைவர் பட்டப்படிப்பு நுழைவுத் தேர்வாகவும், உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வாகவும் விளங்குகிறது. 87 பாடங்களுக்கு தேசிய அளவில் வருடத்திற்கு இருமுறை நடத்தப்படும் இந்த தேர்வை, 2026 ஜூன் மாதத்தில் சுமார் 9 லட்சம் தேர்வர்கள் எழுதியுள்ளனர்.
இந்தத் தேர்வு ஜூன் 22 முதல் ஜூன் 30 வரை கணினி வழியில் நடைபெற்றது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒரு தேர்வு மட்டும் ஜூலை 5 அன்று நடைபெற்றது.
விடைக்குறிப்பை தேர்வர்கள் (யுஜிசி நெட் அதிகாரப்பூர்வ இணையதளம்) (https://ugcnet.nta.nic.in/) வழியாக அறிந்துகொள்ளலாம். விடைக்குறிப்புடன் தேர்வர்களின் விடைத்தாளும் வெளியிடப்படும். இதனையடுத்து, விடைக்குறிப்பு மீதான ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்படும்.
ஆட்சேபனைகளை நிபுணர் குழு ஆராய்ந்து, இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். விடைக்குறிப்பு வெளியீடு தாமதமானதால், முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : கணிதத்தில் ‘வேர்ல்டு டாப்பர்’.. பிரவுன் பல்கலைக்கழகத்தில் இடம்பிடித்த தமிழக மாணவர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com