Tamil Thai Vazhthu Resolution : தமிழ்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Tamil Thai Vazhthu Resolution : தமிழ்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Published on: August 10, 2026 at 5:41 pm
சென்னை, ஆக.10, 2026: தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் நிதியமைச்சர் மரிய வில்சன் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பின்னர் வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், கூட்டத்தொடர் செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்தார்.
ஆகஸ்ட் 7ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இடையே காரசாரமான விவாதங்கள் நடந்தன. மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு தொடர்பாக நிதியமைச்சர் மரிய வில்சன் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் சட்டப்பேரவை ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இன்று மீண்டும் கூடிய சட்டப்பேரவையில், தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அவையில் சட்டமன்ற உறுப்பினர்களிடம் அதனை முன்மொழிந்தார்.
அதன் மீது அனைத்து கட்சிகளின் சார்பாக உரையாடல்கள் நடைபெற்றன. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. நிறைவாக, தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான தனித் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.
இதையும் படிங்க : தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதை விட த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்கலாம்.. சி.வி சண்முகம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com