C. T. R. Nirmal Kumar: மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ், மகளிருக்கு ரூ.2,500 வழங்கும் திட்டம் குறித்து அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.
C. T. R. Nirmal Kumar: மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ், மகளிருக்கு ரூ.2,500 வழங்கும் திட்டம் குறித்து அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.

Published on: August 6, 2026 at 5:03 pm
சென்னை, ஆக.6, 2026: தமிழக அரசியல் சூழலில் இன்று அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது, “ஒவ்வொரு ஆட்சியிலும் சில நல்ல திட்டங்கள் தொடர்வது இயல்புதான்” என்று குறிப்பிட்டார்.
பெண்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி தொடர்பான கேள்விக்கு அவர், “நிதி ஆதாரத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என பதிலளித்தார். இதன் மூலம், தற்போதைய திட்டங்கள் தொடரும் நிலையில், விரிவாக்கம் குறித்து அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.
2026 ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, நடிகர் விஜய்யின் கட்சியான ‘தமிழக வெற்றி கழகம்’ (TVK) பெண்களுக்கான நிதியுதவியை பெரிதும் விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்துவதாக விஜய் உறுதியளித்தார்.
இந்த திட்டத்தின் கீழ், 60 வயதுக்குட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது, அப்போதைய திமுக ஆட்சியில் நடைமுறையில் இருந்த ரூ.1,000 நிதியுதவித் திட்டத்தை விட மேம்பட்டதாகக் கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கச்சா எண்ணெய் சந்தையில் இந்தியா.. வெனிசுலாவில் இரண்டு வயல்களை இயக்க ஒப்பந்தம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com