கர்ப்பிணிகள், குழந்தைகள் சாக்லேட் சாப்பிடலாமா? சாக்லேட் சாப்பிடுவதால் நன்மை- தீமைகள் என்ன?

Chocolate: சாக்லேட் சாப்பிடுவதால் பல நன்மைகள் இருந்தாலும், சிலருக்கு அது தீமைகளை ஏற்படுத்தக்கூடும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Published on: August 3, 2026 at 1:02 pm

Updated on: August 3, 2026 at 1:04 pm

சென்னை, ஆக.3, 2026: சாக்லேட் சாப்பிடுவதால் பல நன்மைகள் இருந்தாலும், சிலருக்கு அது தீமைகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக கர்ப்பிணிகள், சிறுவர், அமிலக் கசிவு, சிறுநீரக கற்கள், மைக்ரேன், இரத்தக் கசிவு பிரச்சனை, கஃபீன் உணர்திறன் அதிகம் உள்ளவர்கள் சாக்லேட்டை தவிர்க்க வேண்டும்.

யார் யார் சாக்லேட்டை தவிர்க்க வேண்டும்?

கர்ப்பிணிகள் மற்றும் சிறுவர்கள் சாக்லேட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்; காரணம், சில சாக்லேட்களில் உடலுக்கு தீங்கிழைவிக்கும் கனிமங்கள் இருக்கக்கூடும்; இது வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு ஆபத்தானது.

அமிலக் கசிவு (GERD): சாக்லேட்டில் உள்ள தியோபுரோமைன் மற்றும் கேபினே ஆகியவை உடலில் சில தீங்குகளை ஏற்படுத்துகின்றன.

சிறுநீரக கற்கள்: சாக்லேட்டில் ஆக்ஸலேட் அதிகம் இருப்பதால் கால்சியம் ஆக்ஸேலேட் கிட்னி கற்கள் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும்.

மைக்ரேன்: கோகோ-வில் உள்ள தைரமின் மற்றும் கேபினே போன்றவை சிலருக்கு தலைவலி தூண்டக்கூடும்.

இரத்தக் கசிவு பிரச்சனை: அதிக அளவு கோகோ உட்கொள்வது ரத்தத்தில் கிளாட்டிங்-ஐ தாமதப்படுத்தும்.

சாக்லேட்டின் நன்மைகள்

ஆண்டி-ஆக்ஸிடன்ட்கள்: சாக்லேட்-ஐ சரியான அளவு சாப்பிட்டால் உடலில் ரெடிகேல்ஸ் குறைந்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மனநிலை மேம்பாடு: செரோடோனின் மற்றும் டோபமைன் உற்பத்தியை தூண்டி மன அழுத்தத்தை குறைக்கும்.

இதய ஆரோக்கியம்: மிதமான அளவில் டார்க் சாக்லேட் சாப்பிடுவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, அதிக ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

மூளை செயல்பாடு: மூளை இரத்த ஓட்டத்தை அதிகரித்து நினைவாற்றலை மேம்படுத்தும்.

சாக்லேட்டின் தீமைகள்

அதிக கலோரி: பால்/வெள்ளை சாக்லேட்டில் அதிக சர்க்கரை, கொழுப்பு இருப்பதால் உடல் எடை அதிகரிக்கும்.

கஃபீன் தாக்கம்: அதிக அளவில் சாப்பிட்டால் தூக்கமின்மை, பதட்டம், இதய துடிப்பு அதிகரிப்பு ஏற்படும். செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.

சாக்லேட் சாப்பிடுவதால் மிதமான அளவில் பல நன்மைகள் கிடைக்கும். ஆனால், சில உடல்நிலை பிரச்சனைகள் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் சிறுவர்கள் அதிகமாக சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பப்பாளி பழத்தின் பலன்கள் என்ன? மலச்சிக்கலுக்கு இது சிறந்த தீர்வா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com