திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் ஐகோர்ட் உத்தரவுக்கு தடை இல்லை.. உச்ச நீதிமன்றம்

Thiruparankundram Hill Row : திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் ஐகோர்ட உத்தரவுக்கு தடை இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Published on: August 3, 2026 at 1:17 pm

Updated on: August 3, 2026 at 4:04 pm

புதுடெல்லி, ஆக.3, 2026: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய விளக்கு ஏற்ற அனுமதி உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவுக்கு அருகிலுள்ள கல் தூணில் விளக்கு ஏற்ற அனுமதித்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை, நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் பஞ்சோலி அடங்கிய அமர்வு விசாரித்தது.

மேலும் உச்ச நீதிமன்ற அமர்வு, உயர் நீதிமன்றத்தில் மனுதாரர்களாக இருந்தவர்கள், இந்திய தொல்லியல் துறை (ASI), தமிழ்நாடு வக்பு வாரியம், சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இருப்பினும், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை நிராகரித்தது. அந்தத் தடை கோரும் மனுவிற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த மனு, ‘இந்து தர்ம பரிஷத்’ அமைப்பு தாக்கல் செய்திருந்த WP(c) 1280/2025 என்ற வழக்குடன் இணைக்கப்பட்டு விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வழக்கில், மலையை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்றும், தினமும் விளக்கு ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு டிசம்பரில் தனி நீதிபதி அனுமதித்த ‘கார்த்திகை தீபம்’ உத்தரவை, ஜனவரி 6 அன்று மதுரை கிளை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மாநில அரசு சிறப்பு விடுப்பு மனுவை தாக்கல் செய்தது. தீபத் தூணில் விளக்கு ஏற்றும் வழக்கம் இல்லை என்றும், வழக்கமாக வேறு இடத்தில்தான் விளக்கு ஏற்றப்படுகிறது என்றும் இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) வாதிட்டது. ஆனால், விளக்கு ஏற்றுவதைத் தடுப்பது பக்தர்களின் உரிமைகளை மீறுவதாகும் என்றும், தர்காவின் உரிமைகள் பாதிக்கப்படாது என்றும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பளித்தார்.

விளக்கு ஏற்றுவது சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தாது என்றும், பாரம்பரியங்களைப் பாதுகாப்பது கோயில் நிர்வாகத்தின் கடமை என்றும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், தீபத் தூண் என்பது ஆங்கிலேய ஆட்சியாளர்களால் நாட்டப்பட்ட நில அளவீட்டுக் கல் என்ற மாநில அரசின் வாதத்தையும் நிராகரித்தது. இவ்வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதால், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் மீண்டும் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க : போதை இல்லா இந்தியா… பிரதமர் மோடி தொடங்கிய புதிய மக்கள் இயக்கம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com