AP Airport : ஆந்திரப் பிரதேசம் விஜயநகரம் மாவட்டம் போகாபுரத்தில் ரூ.5,640 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
AP Airport : ஆந்திரப் பிரதேசம் விஜயநகரம் மாவட்டம் போகாபுரத்தில் ரூ.5,640 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

Published on: August 1, 2026 at 3:29 pm
விஜயநகரம், ஆகஸ்ட் 1, 2026: பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டம் போகாபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிரீன்ஃபீல்ட் அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை இன்று திறந்து வைத்தார். பொதுத்-தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் ரூ.5,640 கோடிக்கும் அதிகமான செலவில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
பொது-தனியார் கூட்டாண்மை முறையில் 5,640 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட இந்த விமான நிலையம், ஆண்டுக்கு 60 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டது. இந்த விமான நிலையத்தில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அமைப்புகள், பயோமெட்ரிக் பயணிகள் செயலாக்க வசதி மற்றும் தானியங்கி பேகேஜ் கையாளும் அமைப்பு உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
விமான நிலையத்தின் முக்கிய அம்சங்களை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு மற்றும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. ராம் மோகன் நாயுடு ஆகியோர் பிரதமர் மோடிக்கு விளக்கிக் கூறினர். இந்த விமான நிலையம் மாநிலத்தின் விமானப் போக்குவரத்து மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகலில், பிரதமர் மோடி மாநிலத்தில் சுமார் 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, அவற்றை தொடங்கி வைக்கிறார்.
இதையும் படிங்க : தேர்வு முறைகேடு.. ₹10 கோடி அபராதம்.. சிறை தண்டனை எத்தனை ஆண்டுகள் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com