வினாத்தாள் கசிவை தடுக்க கடுமையான சட்டம்… தேர்வு முறையில் தொடர் சீர்திருத்தம்: பிரதமர் மோடி

Modi on Exam Reforms : நம்பகமான தேர்வு முறையை உருவாக்க மத்திய அரசு தொடர்ந்து சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Published on: July 31, 2026 at 11:24 am

புதுடெல்லி, ஜூலை 31 2026: நம்பகமான மற்றும் வெளிப்படையான தேர்வு முறையை உருவாக்க மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள காணொலி செய்தியில், கடந்த பல தசாப்தங்களாக மாநில அரசுகளும், மத்திய அரசும் வினாத்தாள் கசிவு பிரச்சினையை எதிர்கொண்டு வருவதாகவும், இது மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனை கருத்தில் கொண்டு, மாநில மற்றும் மத்திய அரசுகள் இணைந்து கல்வி மற்றும் தேர்வு முறைகளில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்வது அவசியமாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். தேர்வு முறைகேடுகளைத் தடுக்க கடுமையான சட்டப் பிரிவுகள் கொண்ட மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தொழில்நுட்ப அடிப்படையிலான வெளிப்படையான தேர்வு முறை, வினாத்தாள் கசிவைத் தடுக்கும் வலுவான சட்டங்கள் மற்றும் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் கும்பல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை ஆகியவை மாணவர்களின் உழைப்பை பாதுகாக்கும் என பிரதமர் கூறினார்.

மாணவர்களின் நம்பிக்கையை காக்கவும், ‘விக்சித் பாரத்’ (Viksit Bharat) இலக்கை நோக்கிய வலுவான கல்வி அடித்தளத்தை உருவாக்கவும் இந்த சீர்திருத்தங்கள் முக்கிய பங்காற்றும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: இந்து சமய அறநிலையத் துறையில் இரண்டு புதிய ஐ.ஏ.எஸ் பணியிடங்கள்.. தமிழநாடு அரசு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com