Metro Projects Rejected Again: மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு 2-வது முறையாக நிராகரித்துள்ளது.
Metro Projects Rejected Again: மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு 2-வது முறையாக நிராகரித்துள்ளது.

Published on: July 26, 2026 at 1:13 pm
சென்னை, ஜூலை 26 2026 : மதுரை மற்றும் கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அனுப்பிய விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசு 2-வது முறையாக நிராகரித்து திருப்பி அனுப்பியுள்ளது. இந்த இரு நகரங்களிலும் மக்கள்தொகை மற்றும் பயண நேரக் குறைப்பு தொடர்பான அளவுகோல்கள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதையே மத்திய அரசு முக்கிய காரணமாகக் குறிப்பிட்டுள்ளது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள கருத்துப்படி, மெட்ரோ திட்டம் செயல்படுத்த குறைந்தபட்சம் 20 லட்சம் மக்கள் தொகை இருக்க வேண்டும். ஆனால் மதுரை மற்றும் கோயம்புத்தூரின் மக்கள் தொகை தலா சுமார் 15 லட்சம் மட்டுமே இருப்பதாகவும், இந்தத் திட்டங்கள் பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும் என்ற ஆதாரம் போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலாக, பேருந்து போக்குவரத்தை மேலும் மேம்படுத்துவது பொருத்தமான மாற்று எனவும் பரிந்துரைத்துள்ளது.
சென்னை மெட்ரோவுக்கு அடுத்ததாக மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தது. கோயம்புத்தூரில் கருமத்தம்பட்டி–அவிநாசி சாலை மற்றும் உக்கடம்–வள்ளியம்பாளையம் பிரிவு சத்தியமங்கலம் சாலை வழியாக 39 கி.மீ. உயர்மட்ட வழித்தடமும், மதுரையில் திருமங்கலம்–ஒத்தக்கடை இடையே 31.93 கி.மீ. நீளத்தில், 23 உயர்மட்ட நிலையங்கள் மற்றும் 3 நிலத்தடி நிலையங்களுடன் மெட்ரோ திட்டமும் முன்மொழியப்பட்டிருந்தது.
இந்த திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தயாரித்து, தமிழ்நாடு அரசின் ஒப்புதலுக்குப் பிறகு மத்திய அரசுக்கு அனுப்பியது. மதுரை திட்டம் ₹11,360 கோடியும், கோயம்புத்தூர் திட்டம் ₹10,740 கோடியும் மதிப்பீட்டில் இருந்தன. கடந்த ஆண்டு நவம்பரில் ஒருமுறை நிராகரிக்கப்பட்ட இந்த திட்டங்கள், தமிழ்நாடு அரசு மீண்டும் மே மாதத்தில் அனுப்பிய பின்னரும் தற்போது 2-வது முறையாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்.. பழ. நெடுமாறன் பரபரப்பு பேட்டி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com