EV VELU PROBE: சாலைப் பணிகள் தொடர்பான ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு உட்பட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி அவர் விசாரணை அதிகாரி முன்பு ஆஜரானார்.
EV VELU PROBE: சாலைப் பணிகள் தொடர்பான ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு உட்பட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி அவர் விசாரணை அதிகாரி முன்பு ஆஜரானார்.

Published on: July 15, 2026 at 12:54 pm
சென்னை, ஜூலை 15 2026: சாலை உள்கட்டமைப்பு பணிகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சரும் தி.மு.க. மூத்த தலைவருமான எ.வ.வேலு, இன்று சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஆஜரானார். வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக அதிகாரிகள் அவரிடம் விளக்கம் பெற்றனர்.
அறப்போர் இயக்கம் 2022-ஆம் ஆண்டு அளித்த புகாரின் அடிப்படையில், சாலைப் பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்பே ஒப்பந்ததாரருக்கு நிதி வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கடந்த ஜூன் 25-ஆம் தேதி எ.வ.வேலு மற்றும் பிறர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து அவருடன் தொடர்புடைய பல இடங்களில் சோதனைகளும் நடைபெற்றன.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த 3-ந் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் சிங்கப்பூர் சென்று இருந்த எ.வ.வேலு, அங்கு உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த வழக்கில் எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த லுக் அவுட் நோட்டீசுகடகு இடைக்காலத் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜூலை 15-ஆம் தேதி விசாரணை அதிகாரி முன்பு அவர் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்றும், அதுவரை கட்டாய நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின்படியே இன்று அவர் நேரில் ஆஜரானார்.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க 124-வது பிறந்தநாள்: பெருந்தலைவர் காமராஜருக்கு முதலமைச்சர் விஜய் மரியாதை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com