EPS ON KAMARAJ: பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கல்வி, விவசாயம் மற்றும் தமிழக வளர்ச்சிக்காக காமராஜர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்துளார்.
EPS ON KAMARAJ: பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கல்வி, விவசாயம் மற்றும் தமிழக வளர்ச்சிக்காக காமராஜர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்துளார்.

Published on: July 15, 2026 at 12:47 pm
சென்னை, ஜூலை 15 2026: பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளையொட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவின் மூலம் அவருக்கு புகழஞ்சலி செலுத்தினார். தமிழகத்தின் கல்வி மற்றும் வளர்ச்சிக்காக காமராஜர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பணிகளை அவர் நினைவுகூர்ந்தார்.
தனது பதிவில், “பள்ளி மணிகள் பல ஒலிக்கட்டும்; பாமரனுக்கும் கல்வி எளிதாகட்டும் என தமிழகத்தின் கல்விக்கண் திறந்த கர்மவீரர்” என்று காமராஜரைப் போற்றிய எடப்பாடி பழனிசாமி, நாட்டின் முன்னேற்றத்திற்கும் விவசாய வளத்திற்கும் பல அணைகள் அமைத்து அடித்தளம் அமைத்த மாமனிதர் என்றும் குறிப்பிட்டார்.
பள்ளி மணிகள் பல ஒலிக்கட்டும்,
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) July 15, 2026
பாமரனுக்கும் கல்வி எளிதாகட்டும்,
என தமிழகத்தின் கல்விக்கண்
திறந்த கர்மவீரர் ..,
நாடு நலம் பெற,
விவசாயம் செழிக்க,
அணைகள் பலதந்த மாமனிதர்..,
தமிழகத்தின்
வளர்ச்சிக்கு வித்திட்ட,
பெருந்தலைவர் #காமராஜர் அவர்களின் பிறந்த தினத்தில் அவர்தம் பெரும்புகழை… pic.twitter.com/DSvkScYXMv
மேலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட பெருந்தலைவர் காமராஜரின் தொலைநோக்கு பார்வையும், கல்வி மற்றும் நீர்ப்பாசனத் துறைகளில் அவர் ஏற்படுத்திய மாற்றங்களும் தலைமுறைகள் நினைவுகூரும் சாதனைகள் என தனது பதிவில் பாராட்டினார்.
இறுதியாக, “தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த தினத்தில், அவர்தம் பெரும்புகழை போற்றி வணங்குகிறேன்” என்று எடப்பாடி கே. பழனிசாமி தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துளள்ளார்.
இதையும் படிங்க 124-வது பிறந்தநாள்: பெருந்தலைவர் காமராஜருக்கு முதலமைச்சர் விஜய் மரியாதை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com