“டொராண்டோ வீதி திருவிழாவில் ரத்தக்களரி… கனடாவை உலுக்கிய கொடூர தாக்குதல்!

Toronto Shooting : கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்ற வீதி திருவிழாவின் போது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

Published on: July 12, 2026 at 2:44 pm

டொராண்டோ, ஜூலை 12, 2026 : கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்ற வீதி திருவிழாவின் போது, பொதுமக்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாக்குதல் நடத்திய நபர்கள் சம்பவத்திற்குப் பிறகு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை பிடிக்க டொராண்டோ காவல்துறையினர் சிறப்பு குழுக்களை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடைபெற்றதைத் தொடர்ந்து திருவிழா உடனடியாக நிறுத்தப்பட்டதுடன், சம்பவம் நடந்த பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த தாக்குதல் டொராண்டோ நகரில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கான காரணம் குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க ஹோர்மோஸ் நீரினை மூடல்.. ஈரான் அதிரடி அறிவிப்பு..!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com