சென்னை மாநகராட்சி ரூ.700 கோடி டெண்டர் ரத்து.. அடித்து ஆடும் த.வெ.க!

₹700 Crore Tenders Cancelled : சென்னை மாநகராட்சி ரூ.700 கோடி டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Published on: July 8, 2026 at 6:21 pm

சென்னை, ஜூலை 8, 206: சென்னை மாநகராட்சி செலவினங்களை முறைப்படுத்தும் நோக்கில், ரூ.700 கோடி மதிப்பிலான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் வேளச்சேரி புதிய மேம்பால திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அடங்குகின்றன. நிதிச்சுமை காரணமாக இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரத்து செய்யப்பட்ட டெண்டர்கள் மறுஆய்வு செய்யப்படும் என்றும், நிதி நிலைமை சீரடைந்த பிறகு திட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு புதிய டெண்டர்கள் கோரப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், நகராட்சி செலவினங்களை கட்டுப்படுத்தி, நிதி நிலையை சீராக வைத்துக்கொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த வாரம் ரூ.284 கோடி மதிப்பிலான நடைபாதை திட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக, தற்போது ரூ.700 கோடி மதிப்பிலான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது, நகராட்சியின் நிதி மேலாண்மையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை வெளிப்படுத்துகிறது.

இதையும் படிங்க : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ஆகஸ்டில் திறப்பு? பரபரப்பு தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com