Hitachi investment Tamil Nadu : தமிழ்நாட்டில் ஹிட்டாச்சி ரூ.1,000 கோடி முதலீடு செய்கிறது. இதற்கான ஒப்பந்தம் முதமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது.
Hitachi investment Tamil Nadu : தமிழ்நாட்டில் ஹிட்டாச்சி ரூ.1,000 கோடி முதலீடு செய்கிறது. இதற்கான ஒப்பந்தம் முதமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது.

Published on: July 7, 2026 at 8:17 pm
சென்னை, ஜூலை 7, 2026: தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடி முதலீட்டில் ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் மற்றும் ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் உற்பத்தி விரிவாக்கத் திட்டங்களை மேற்கொள்ள உள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது.
பேரளம்பாக்கத்தில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டம் மற்றும் செங்கல்பட்டில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி விரிவாக்கத் திட்டம் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் அடங்குகின்றன. இத்திட்டங்கள் மூலம் 1,000 பேருக்கு உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஹிட்டாச்சியின் இந்த முதலீடு முக்கிய பங்காற்றும். மாநிலத்தில் தொழில்நுட்ப அடிப்படையிலான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதோடு, உற்பத்தி திறனும் மேம்படும்.
முதலமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தான இந்த ஒப்பந்தம், தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டு வளர்ச்சியை ஒருங்கிணைக்கும் இந்த முயற்சி, மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கும்.
இதையும் படிங்க : ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிரான வழக்கு.. தி.மு.க. மனு வாபஸ்.. பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com