என் கொடி பறக்க வேண்டிய இடத்தில்.. 7வது முறையாக ஆஸி சாம்பியன்!

Womens T20 Worls Cup 2026: மகளிர் உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி மீண்டும் சாம்பியன் ஆகியுள்ளது.

Published on: July 6, 2026 at 2:26 pm

லண்டன், ஜூலை 6, 2026: ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தை வீழ்த்தி 7ஆவது முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்தது.

இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 150/4 ரன்கள் எடுத்தது. அவர்களின் தொடக்க வீராங்கனைகள் நல்ல ஆட்டம் காட்டினாலும், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை கைப்பற்றி அழுத்தம் கொடுத்தனர்.

பின்னர் ஆஸ்திரேலிய அணி இலக்கை எளிதாக அடைந்தது. 17.1 ஓவர்களில் 153/3 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது. தொடக்க வீராங்கனைகள் வலுவான ஆட்டம் காட்டியதோடு, நடுப்பகுதி பேட்ஸ்வுமன்கள் சீரான ஆட்டத்தால் அணியை வெற்றிக்குத் தூண்டினர்.

இந்த வெற்றி, ஆஸ்திரேலிய மகளிர் அணியின் டி20 உலகக் கோப்பை சாதனைக்கு மேலும் ஒர் மணிமகுடன் ஆகியுள்ளது.

இதையும் படிங்க : நம்ம சேட்டனுக்கு என்னாச்சு? போட்டிகளில் சொதப்பும் சஞ்சு சாம்சன்.. தேர்வுக் குழு தயக்கம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com