CM Vijay: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அடுத்த மாதம் (ஜூலை) கரூர் செல்கிறார்.
CM Vijay: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அடுத்த மாதம் (ஜூலை) கரூர் செல்கிறார்.

Published on: June 30, 2026 at 5:54 pm
சென்னை, ஜூன் 30, 2026 : தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், ஜோசப் விஜய் ஜூலை 10, 11 ஆகிய தேதிகளில் கரூர் மாவட்டத்திற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்கிறார். இது அவரது முதலமைச்சர் பதவியேற்புக்குப் பிறகு கரூருக்கு செல்லும் முதல் பயணமாகும்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, விஜய் அவர்களை சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது கரூருக்கு நேரில் செல்லாமல், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்தது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. இதனால், முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் கரூருக்கு விஜய் மேற்கொள்ளும் இந்த பயணம் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிங்க : தி.மு.க, பா.ஜ.க கூட்டணியா? இஸ்லாம் மதம் மாறினால் இடஒதுக்கீடு இல்லையா? தமிமுன் அன்சாரி கொந்தளிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com