தமிழக அரசியலில் பரபரப்பு.. கரூர் எம்.எல்.ஏ விஜயபாஸ்கர் ராஜினாமா!

M.R. Vijayabaskar Resigns from Assembly Seat : கரூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ எம். எம்.எஸ் விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Published on: June 29, 2026 at 2:05 pm

Updated on: June 29, 2026 at 2:13 pm

சென்னை, ஜூன் 29, 2026: கரூர் தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ எம். ஆர். விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் நேரடியாக வழங்கினார்.
இதனால் அ.தி.மு.க வலுவிழந்து, சட்டப்பேரவையில் அதன் உறுப்பினர் எண்ணிக்கை 41 ஆகக் குறைந்துள்ளது.
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ராஜினாமா, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் ஏற்பட்ட உள்கிளர்ச்சியின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு 25 எம்.எல்.ஏக்கள் கட்சியின் ‘விப்’ உத்தரவை மீறி, ஆளும் தமிழக வெற்றி கழக (TVK) அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களைப் பதவியிலிருந்து நீக்கினார்.

இதற்கு முன்னர், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உட்பட பலர் ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழக்தில் இணைந்தனர். கரூர் எம்.எல்.ஏ விஜயபாஸ்கரின் ராஜினாமா, அ.தி.மு.க-வின் தொடர்ச்சியான வீழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. 2026 தேர்தலில் அவர் வெறும் 1,821 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

இந்த ராஜினாமாவால் கரூர் தொகுதி காலியாகியுள்ளது. சட்டப்பேரவைச் செயலாளர் தேர்தல் ஆணையத்துக்கு அறிவித்தவுடன் இடைத்தேர்தல் நடைபெறும். ஏற்கனவே ஆறு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால், கட்சியின் நிலைமை மேலும் சிக்கலானதாகியுள்ளது.

தமிழக அரசியலில் அ.தி.மு.க-வின் எதிர்காலம் குறித்து பல்வேறு அரசியல் வட்டாரங்களில் விவாதம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: 6 மாதத்தில் ஆட்சி கவிழுமா? பகல் கனவு காண்கிறார் மு.க ஸ்டாலின்.. விஜயதாரணி அதிரடி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com