K. Bhagyaraj இயக்குனர் நடிகர் என பன்முகத் திறமை கொண்ட பாக்யராஜ், மாரடைப்பு காரணமாக நேற்று மரணம் அடைந்த நிலையில் இன்று அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.
K. Bhagyaraj இயக்குனர் நடிகர் என பன்முகத் திறமை கொண்ட பாக்யராஜ், மாரடைப்பு காரணமாக நேற்று மரணம் அடைந்த நிலையில் இன்று அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

Published on: June 28, 2026 at 7:36 am
Updated on: June 28, 2026 at 3:56 pm
சென்னை ஜூன் 28 2026; தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் அவர்களின் மறைவுக்கு பின், அவரது இறுதி மரியாதைச் சடங்குகள் இன்று (ஜூன் 28, 2026) காலை 9:00 மணி வரை அவரது இல்லத்தில் நடைபெறுகின்றன. குடும்பத்தினர், உறவினர்கள், ரசிகர்கள், திரையுலக நண்பர்கள் அனைவரும் அங்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காலை 9:45 மணியளவில், அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு, சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தைச் சென்றடையும். ஊர்வலத்தில் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.
பின்னர் காலை 10:45 மணி முதல் 11:45 மணி வரை, பெசன்ட் நகர் மின்மயானத்தில் இறுதி சடங்குகள் முறைப்படி நடத்தப்பட்டு தகனம் செய்யப்படும். பாக்யராஜ் அவர்களின் மறைவு, தமிழ் சினிமாவுக்கும், ரசிகர்களுக்கும் பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
அவரது படைப்புகள், தனித்துவமான வசனங்கள், நகைச்சுவை உணர்வு, பன்முகத் திறமைகள் அனைத்தும் என்றும் ரசிகர்களின் நினைவில் நிலைத்திருக்கும். இறுதி மரியாதைச் சடங்குகள் நடைபெறும் இந்த தருணத்தில், தமிழ்த் திரையுலகம் முழுவதும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.
இதையும் படிங்க; எம்ஜிஆரின் அரசியல் வாரிசு.. திரைக்கதை மன்னன்.. யார் இந்த கே. பாக்யராஜ்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com