நகைச்சுவை உணர்வு, இலக்கிய திறமை.. மாபெரும் கலைஞர் கே பாக்யராஜ் மரணம்.. ஜி.கே வாசன் இரங்கல்!

G.K.Vasan Condolences Bhagyaraj : நடிகரும் இயக்குனருமான கே பாக்யராஜ் மறைவுக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Published on: June 27, 2026 at 6:55 pm

சென்னை ஜூன் 27 2026;தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் அவர்கள் மறைவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். “தமிழ் சினிமாவில் புதிய பாணியில் திரைக்கதை அமைத்ததில், புதிய வசனங்களை அறிமுகப்படுத்தியதில் பிரபலமானவர் பாக்யராஜ். பல வெற்றிப் படங்களை இயக்கி, நடிகராகவும், எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும், பத்திரிகையாளராகவும், அரசியல்வாதியாகவும் பன்முகத்தன்மை கொண்டவர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாக்யராஜ், நகைச்சுவை உணர்வு மிக்க இலக்கிய ஈடுபாடும் கொண்டவர். பல திறமையான இயக்குநர்கள் உருவாகுவதற்கு காரணமாக இருந்தவர். தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். தமிழ்த் திரையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு சிறப்புக்குறியது என்றும், அவரது மறைவு மிகப்பெரிய இழப்பாகும் என்றும் வாசன் தெரிவித்துள்ளார்.

அவரது கலைத்துறையில் ஆற்றிய சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில் பிலிம்பேர் விருது மற்றும் SIIMA வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர் பாக்யராஜ். தமிழ் சினிமாவில் அவர் உருவாக்கிய தனித்துவமான பாணி, திரைக்கதை மற்றும் வசனங்கள் ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.

“யதார்த்தமான மனிதரான பாக்யராஜ் அவர்களின் மறைவு அவரது குடும்பத்தினருக்கும், தமிழ்த் திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ்த் திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என ஜி.கே. வாசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க மு.க. ஸ்டாலின் வரலாறை மறுக்க முடியாது.. கொதித்தெழுந்த செல்வப் பெருந்தகை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com