Former Judge Joins IUML : இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியில் முன்னாள் நீதிபதி முகம்மது இஸ்மாயில் இணைந்தார்.
Former Judge Joins IUML : இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியில் முன்னாள் நீதிபதி முகம்மது இஸ்மாயில் இணைந்தார்.

Published on: June 25, 2026 at 11:36 am
சென்னை, ஜூன் 25, 2026: கர்நாடக அரசின் முன்னாள் மாவட்ட நீதிபதியும் கூடுதல் சட்டச் செயலாளருமான முகமது இஸ்மாயில், தற்போது கர்நாடக மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.
அவர் சென்னை நகரில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைமை அலுவலகத்தில், அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்த நிகழ்வில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் முன்னிலையில் முகமது இஸ்மாயில் கட்சியில் இணைந்தார். இதன் மூலம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சட்ட மற்றும் சமூக துறைகளில் வலிமை அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.
இந்நிகழ்வில் கட்சியின் தேசியச் செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான எச். அப்துல் பாசித், தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கே.ஏ.எம். முகமது அபுபக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் வழக்கறிஞர் புகழல் ஷேக் முகமது அலியும் உடனிருந்தார்.
முன்னாள் நீதிபதி முகமது இஸ்மாயில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியில் இணைந்தது, அந்தக் கட்சியின் சட்ட ரீதியான வலிமையை அதிகரிக்கும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. நீதித்துறையில் பெற்ற அனுபவம், சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் சமூக நீதி தொடர்பான நடவடிக்கைகளில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு பெரும் ஆதரவாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : நிறைமாத கர்ப்பிணிக்கு பணி நியமன ஆணை.. மேடையில் இருந்து இறங்கிவந்து வழங்கிய விஜய்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com