Dravidar Kazhagam President K Veeramani : “அனைவரையும் சம உரிமை, சம வாய்ப்பு உள்ளவர்களாக்கும், சமத்துவச் சமுதாயம் காண வைப்பதே தந்தை பெரியாரின் கொள்கை” என்றும் “கடவுள் மறுப்பு அவரது கொள்கை அல்ல” என்றும் கி. வீரமணி கூறியுள்ளார்.
Dravidar Kazhagam President K Veeramani : “அனைவரையும் சம உரிமை, சம வாய்ப்பு உள்ளவர்களாக்கும், சமத்துவச் சமுதாயம் காண வைப்பதே தந்தை பெரியாரின் கொள்கை” என்றும் “கடவுள் மறுப்பு அவரது கொள்கை அல்ல” என்றும் கி. வீரமணி கூறியுள்ளார்.

Published on: June 25, 2026 at 11:48 am
சென்னை, ஜூன் 25, 2026: திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடவுள் மறுப்பு அவரது கொள்கை அல்ல. அவரது வேலைத் திட்டம் அது” எனத் தெரிவித்துள்ளார்.
கி. வீரமணி விளக்கம்
அறிக்கையில் மேலும், “23.6.2026) காலை தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைபற்றி நடந்த விவாதத்தில் பதில் அளித்த முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், தங்களது ஆட்சியின் கொள்கை நிலைப்பாடு எப்படிப்பட்டது என்பதை விளக்கியபோது, தந்தை பெரியார் கொள்கையில், ‘‘கடவுள் மறுப்புக் கொள்கை ஒன்றைத் தவிர, மற்ற எல்லாக் கொள்கைகளுக்கும் உடன்பாடு; அதுதான் எங்கள் நிலைப்பாடு’’ என்று கூறியிருந்தார்.
இதுபற்றி முதலமைச்சர் அவர்களுக்கு மட்டுமல்ல, இதேபோன்று உள்ள பலருக்கும் பெரியாரை முழுமையாகப் புரியவைப்பது நமது கடமை. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், ஜாதி, தீண்டாமை, பெண்ணடிமை ஒழிப்பைக் கொண்ட, சமத்துவ சமுதாயம் அமைய வேண்டும் என்ற கொள்கையை முன்வைத்துப் போராடியவர்.
சமத்துவ சமுதாயம் காண வைப்பதே தந்தை பெரியாரின் கொள்கை ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.
கடவுள் மறுப்பு கொள்கை அல்ல
மேலும், “தந்தை பெரியாரின் ‘‘கடவுள் மறுப்பு’’ என்பது முக்கியக் கொள்கை அல்ல; மாறாக திட்டம்!
இம்மாதிரி ஒரு பதிலை – அதாவது தந்தை பெரியாரின் ‘‘கடவுள் மறுப்பு’’ என்பது அவரது கொள்கை அல்ல; மாறாக திட்டம் (Policy) ஜாதி, தீண்டாமை அழிப்பிற்கு என்பதை – பல ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ‘‘மாலன்’’ அவர்கள் ‘தினமணி’ நாளேட்டின் ஆசிரியராக இருந்தபோது என்னை ஒரு பேட்டி எடுத்து, அதனை ‘தினமணி’ நாளேட்டில் வெளியிட்டபோதே இதே விளக்கத்தை நான் கூறியது அப்போது வெளிவந்துள்ளது என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டுவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “மீண்டும் பலரும் தெளிவடைய, புரிதல் அடையவே இந்த விளக்கம். ‘‘தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு அவரது கொள்கை அல்ல! அதே நேரத்தில் கடவுள் ஒன்று கிடையாது என்பது அவரது சிந்தனைக் கூர்மையின் உச்சம் – பகுத்தறிவு நிலைப்பாட்டில்! அவரது வேலைத் திட்டம் அது!” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : நிறைமாத கர்ப்பிணிக்கு பணி நியமன ஆணை.. மேடையில் இருந்து இறங்கிவந்து வழங்கிய விஜய்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com