பாவங்கள் நீங்கி செல்வம் பெருகும்.. ஆனி திருமஞ்சனத்தின் மகிமை என்ன?

Aani Thirumanjanam: சைவ சமயத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த திருநாள்களில் ஒன்றாகக் கருதப்படும் ஆனி திருமஞ்சனம் இந்த ஆண்டு ஜூன் 22-ந் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது.

Published on: June 19, 2026 at 1:28 pm

சென்னை, ஜுன் 19 2026: நடராஜப் பெருமானுக்கு ஆண்டில் நடைபெறும் ஆறு மகா அபிஷேகங்களில் ஆனி உத்திர நட்சத்திரத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சனம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. ஆனி திருமஞ்சனம் இந்த ஆண்டு ஜூன் 22-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

சிவபெருமானின் நடராஜர் வடிவத்திற்கு ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை, சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தி, புரட்டாசி சதுர்த்தசி மற்றும் மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மட்டுமே மகா அபிஷேகம் நடத்தப்படுகிறது. இவற்றில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனமும், ஆனி மாத திருமஞ்சனமும் சிறப்பு மிக்கவையாகும். இந்த இரண்டு நிகழ்வுகளின் போது அதிகாலை நேரத்தில் நடைபெறும் அபிஷேகத்தை தரிசிப்பது மிகுந்த புண்ணியமாக கருதப்படுகிறது.

சிதம்பரம் நடராஜர் கோவில்

ஆனி மாத வளர்பிறையில் வரும் உத்திர நட்சத்திர நாளில் நடைபெறும் இந்த விழா, தமிழகம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

குறிப்பாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் உற்சவத்தின் நிறைவு நாளாக ஆனி திருமஞ்சனம் வெகு விமரிசையாக அனுசரிக்கப்படுகிறது. அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் திருநீறு, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெறும். பின்னர் சிறப்பு அலங்காரம் மற்றும் ரகசிய பூஜைகள் நடத்தப்பட்டு, நடராஜப் பெருமானும் சிவகாமி சுந்தரியும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

ஆனி உத்திரம்

சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு அருள்காட்சி அளித்த தினமாகவும், திருவாசகத்தை தாமே எழுதியதாக ஐதீகங்கள் கூறும் நாளாகவும் ஆனி உத்திரம் போற்றப்படுகிறது. மேலும், பதஞ்சலி முனிவர் தொடங்கி வைத்ததாகக் கூறப்படும் இந்த திருவிழா, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் குறிக்கும் ஆனந்த தாண்டவ தத்துவத்தை நினைவூட்டுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

சிவன் கோவில் வழிபாடு

சிதம்பரத்திற்கு சென்று தரிசிக்க முடியாத பக்தர்கள் அருகிலுள்ள சிவன் கோவில்களில் நடைபெறும் நடராஜர் அபிஷேகத்தை தரிசித்தாலும் அதே பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஆனி திருமஞ்சனத்தை பக்தியுடன் தரிசிப்பதால் பாவங்கள் நீங்கும், கர்ம வினைகள் அகலும், செல்வ வளம் பெருகும், உடல் ஆரோக்கியம் மேம்படும், திருமணத் தடை நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் என்று ஆன்மிக நம்பிக்கைகள் கூறுகின்றன.

இதையும் படிங்க ஒரே நாளில் ரூ.3,040 வரை… தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்றைய நிலவரம் தெரியுமா?

சிற்பத்தில் ஆப்டிக்கல் இல்யூஷன்; உலகமே வியக்கும் இடம்.. தமிழ்நாட்டில் எங்கு இருக்கிறது தெரியுமா? Dharasuram Sri Airavatesvara Temple

சிற்பத்தில் ஆப்டிக்கல் இல்யூஷன்; உலகமே வியக்கும் இடம்.. தமிழ்நாட்டில் எங்கு இருக்கிறது தெரியுமா?

பார்வதியின் தவத்தை உலகம் அறிய செய்த சிவன்: மாமரம் தான் தலவிருட்சம்.. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் சிறப்புகள்! History of the Ekambareshwarar Temple in Kanchipuram

பார்வதியின் தவத்தை உலகம் அறிய செய்த சிவன்: மாமரம் தான் தலவிருட்சம்.. காஞ்சிபுரம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com