Gold Rate Today: சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ. 380 குறைந்து விற்பனையாகிறது.
Gold Rate Today: சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ. 380 குறைந்து விற்பனையாகிறது.

Published on: June 19, 2026 at 11:57 am
சென்னை, ஜுன் 19 2026: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமான சரிவு பதிவாகியுள்ளது. ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை நேற்று இருந்ததை விட ரூ.3,040 குறைந்து, ரூ.1,08,560 ஆக விற்பனையாகிறது.
இன்றைய தங்கம் விலை
அதேபோல், ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் ரூ. 380 குறைந்து, ரூ.13,570 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் விலை சரிவு நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
24 கேரட் தூய தங்கத்தைப் பொறுத்தவரை கிராம் ரூ. 14,804 க்கும் சவரன் ரூ. 118,432க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்ததுடன், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் தொடர்பான நிலைப்பாடுகள் மற்றும் டாலரின் வலிமை ஆகியவை தங்க விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொறுத்தமட்டில் நேற்று கிராம் ரூ. 270க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று கிராமுக்கு ரூ. 15 குறைந்துள்ளது. இதனால் கிராம் ரூ. 255க்கும் ஒரு கிலோ ரூ. 2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க வெளிநாட்டு மதுபானங்கள், இறக்குமதி மின்சார வாகனங்கள் விலை குறைகிறதா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com