கடினமான நாட்கள் இல்லை.. பாடம் கற்பிக்கும் நாட்கள்.. மனம் திறந்த ஸ்ருதிஹாசன்

Shruti Haasan : வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏதாவது ஒரு பாடம் கிடைக்கிறது என்றும், கடினமான நாட்கள்கூட நமக்கு முக்கியமான அனுபவங்களை கற்றுத்தரும் நல்ல நாட்கள்தான் என்றும் நடிகை ஸ்ருதிஹாநள் தெரிவித்துள்ளார்.

Published on: June 17, 2026 at 4:47 pm

ஹைதராபாத், ஜுன் 17 2026: ஹைதராபாத் காசிபௌலி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ரக்பி பிரீமியர் லீக் சீசன் 2 திறப்பு விழாவில் நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன் கலந்து கொண்டார். அப்போது வாழ்க்கையில் சந்திக்கும் சவால்கள் மற்றும் அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய ஸ்ருதி ஹாசன், “ரக்பி போன்ற விளையாட்டோ, அல்லது நீங்கள் விரும்பும் வேலையோ எதுவாக இருந்தாலும் பல சவால்கள் இருக்கும். சில சவால்கள் உள் மனதில் இருந்து வரும்; சில சவால்கள் வெளி உலகில் இருந்து வரும். ஆனால் நீங்கள் உண்மையாக விரும்பும் விஷயத்தில் முழு நம்பிக்கையுடன் ஈடுபட்டால், கடினமான நாட்களும் நல்ல பாடங்களை கற்றுத்தரும். நல்ல நாட்கள் தொடர்ந்து செல்லும் உறுதியை அளிக்கும்” என்று தெரிவித்தார்.

தனது வாழ்க்கையில் சந்தித்த ஏற்றத் தாழ்வுகள், தோல்விகள் மற்றும் சவால்கள் அனைத்தும் தன்னை மேலும் வலிமையானவராக மாற்றியுள்ளதாக ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். எப்போதும் நேர்மறையான மனநிலையுடன் இருப்பதற்கும், ஒவ்வொரு அனுபவத்திலிருந்தும் கற்றுக்கொள்வதற்கும் தான் முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வாழ்க்கையில் சில நேரங்களில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் அவற்றை எதிர்மறையாக பார்க்காமல், புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக அணுக வேண்டும். எந்த அனுபவமும் வீணாகாது என்றும், அவை அனைத்தும் தனிநபர் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

“கடினமான நாட்களும் நல்ல நாட்கள்தான், ஏனெனில் அவை நமக்கு பல பாடங்களை கற்றுத்தருகின்றன” என்று கூறிய ஸ்ருதிஹாசன், வாழ்க்கையை நேர்மறையாக அணுகும் மனப்பான்மையே முன்னேற்றத்திற்கு முக்கியம் என்றும் வலியுறுத்தியுள்ளார். அவரது இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க கரு. பழனியப்பனின் புதிய படம்.. டைட்டிலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com