Karu Palaniappan’s Movie Title: கரு. பழனியப்பன் இயக்கும் புதிய படத்தின் தலைப்பை மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
Karu Palaniappan’s Movie Title: கரு. பழனியப்பன் இயக்கும் புதிய படத்தின் தலைப்பை மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

Published on: June 15, 2026 at 8:09 pm
சென்னை, ஜுன் 15 2026: தமிழ் சினிமாவில் ‘பார்த்திபன் கனவு’, ‘சிவப்பதிகாரம்’, ‘பிரிவோம் சந்திப்போம்’, ‘மந்திரப்புன்னகை’, ‘ஜன்னல் ஓரம்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் கரு.பழனியப்பன். அவர் தற்போது நடிகர் காளி வெங்கட் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கரு.பழனியப்பன் இயக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டிலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அந்த படத்திற்கு ‘குக்கர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த தலைப்பு வெளியீட்டு நிகழ்வில் நடிகர் காளி வெங்கட் மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக நடிகராகவும், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் நடுவராகவும் செயல்பட்டு வந்த கரு.பழனியப்பன், தற்போது மீண்டும் இயக்குநராக களமிறங்கி உள்ளார்.
இதையும் படிங்க சாகும் முன் வரை சோசியல் மீடியாவில் ஆக்டிவ்.. படுக்கை அறையில் பிணமாக கிடந்த நடிகை.. ரசிகர்கள் ஷாக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com