Sanjita Ugale Dies by Suicide : மராத்திய இளம் நடிகை சஞ்சிதா உகாலே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Sanjita Ugale Dies by Suicide : மராத்திய இளம் நடிகை சஞ்சிதா உகாலே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Published on: June 15, 2026 at 4:58 pm
மும்பை, ஜுன் 15 2026: மராத்தி மற்றும் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவந்த இளம் நடிகை சஞ்சிதா உகாலே (வயது 22). சஞ்சிதா மும்பை நாலாசோபாரா பகுதியில் பெற்றோர் மற்றும் தங்கையுடன் வசிந்நார்.
இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், படுக்கையறையில் சேலையின் உதவியுடன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சஞ்சிதா உகாலே, ‘கும்கும் பாக்யா’ உள்ளிட்ட இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும், ‘சாவா’ திரைப்படத்திலும் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர். அவரது திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உயிரிழப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புவரை சமூக வலைதளங்களில் உற்சாகமாக பதிவுகள் வெளியிட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க பெண் குழந்தை பெற்றெடுத்த நாகினி நடிகை.. ரசிகர்கள் வாழ்த்து!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com