பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் மிக உயர்ந்த அங்கீகாரம்

Slovakia Honours PM Modi : ஸ்லோவாக்கியா நாட்டின் உயரிய அரச விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி.

Published on: June 16, 2026 at 9:58 am

பிராட்டிஸ்லாவா, ஜுன் 16 2026: ஸ்லோவாக்கியா நாட்டின் அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி, அந்நாட்டின் உயரிய அரச விருதான “தி ஆர்டர் ஆஃப் தி வைட் டபுள் கிராஸ் – முதல் வகுப்பு” (The Order of the White Double Cross, First Class) விருதை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவித்தார். இது ஸ்லோவாக்கியாவின் மிக உயரிய அரசு விருதாகும்.

விருதைப் பெற்ற பிரதமர் மோடி, அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி, ஸ்லோவாக்கியா அரசு மற்றும் அந்நாட்டு மக்களுக்கு தனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்தார். இந்த சிறப்புமிக்க அங்கீகாரத்தை வழங்கியதற்காக அவர் தனது மகிழ்ச்சியையும் பாராட்டையும் வெளிப்படுத்தினார்.

இந்த அங்கீகாரம் 1.4 பில்லியன் இந்திய மக்களுக்கான மரியாதையாகவும், இந்தியா-ஸ்லோவாக்கியா நட்பின் நிலைத்தன்மைக்கான சின்னமாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விருது, இரு நாடுகளின் மக்களிடையே நிலவும் அன்பு, நம்பிக்கை மற்றும் பாசத்தின் சான்றாகும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்தியா மற்றும் ஸ்லோவாக்கியாவை இணைக்கும் உறவுகள், எதிர்கால தலைமுறைகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் தொடர வேண்டும் என்றார்.

மேலும், இந்த அங்கீகாரம் இரு நாடுகளின் சிறப்பு நட்பை வளர்த்தெடுக்கும் புதிய தலைமுறைகளுக்கு ஒரு ஊக்கமாக இருக்கும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியா-ஸ்லோவாக்கியா உறவுகள், பரஸ்பர நம்பிக்கை மற்றும் அன்பின் அடிப்படையில் மேலும் வலுப்பெறும் என அவர் உறுதியளித்தார்.

ஸ்லோவாக்கியா நாட்டிக்கு முதன் முறையாக சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆவார். இந்த பயணத்தில் இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில், இந்தியா-சுலோவாகியா இடையே இடம்பெயர்வு, டிஜிட்டல் தொழில்நுட்பம், பாதுகாப்பு, உயர்கல்வி, குவாண்டம் தகவல் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க மோடியை சந்திக்கும் ட்ரம்ப்.. ஜி7 மாநாடு.. பரபரப்பு தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com