KA Sengottaiyan : கடந்த தி.மு.க. ஆட்சியில் மின்கட்டமைப்பு பணிகள் சரிவர செய்யவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் குற்றஞ்சாட்டினார்.
KA Sengottaiyan : கடந்த தி.மு.க. ஆட்சியில் மின்கட்டமைப்பு பணிகள் சரிவர செய்யவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் குற்றஞ்சாட்டினார்.

Published on: June 14, 2026 at 4:34 pm
கோயம்புத்தூர், ஜூன் 14, 2026: கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், சென்னை நகரத்திற்கு 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில், கடந்த திமுக ஆட்சியில் தேவையான மின்கட்டமைப்பு பணிகள் செய்யப்படவில்லை என குற்றம்சாட்டினார். தற்போது 3,500 மெகாவாட் மட்டுமே கொள்ளளவு உள்ள நிலையில், மக்கள் 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேட்டூர் அணையைப் பொறுத்தவரை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவாக இருப்பதால், தண்ணீர் அதிகமாக இருந்தால் மட்டுமே திறக்க முடியும். இதுகுறித்து முதலமைச்சர் விஜய் பிரதமருடன் பேசும்போது, தமிழகத்திற்கு தேவையான நீரை மாதந்தோறும் வழங்க வலியுறுத்தி வருகிறார் எனவும் அமைச்சர் கூறினார்.
அதிமுக ஆட்சியிலும் மின்வெட்டு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார். சென்னை நகரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 7,000 கோடி ரூபாய் செலவிட்டு மின்சாரத்தை மக்களுக்கு பயனுள்ளதாக வழங்க தேவையான உபகரணங்கள் மற்றும் கட்டுமான பணிகள் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், கடந்த ஆட்சியில் மொத்தம் ரூ.627 கோடி மட்டுமே செலவிடப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேகதாட்டு அணை கட்டக்கூடாது என்ற நிலைப்பாட்டில் முதலமைச்சர் தெளிவாக உள்ளார் எனவும், புதிய மின்கட்டமைப்பு பணிகள் செய்யப்படாததால் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க : செல்வபெருந்தகை மகள் திருமணத்துக்கு பின் காங்கிரஸ் தலைவர் மாற்றம்? பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com