TVK: தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஆல் இந்தியா சிந்தாரிக் பெந்தோகஸ் சபைகளின் தலைவர் பேராயர் ஜோஸ்வா இமானுவேல், “தாம் 21 ஆண்டுகள் தி.மு.க.வில் இருந்தேன்” எனக் கூறினார்.
TVK: தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஆல் இந்தியா சிந்தாரிக் பெந்தோகஸ் சபைகளின் தலைவர் பேராயர் ஜோஸ்வா இமானுவேல், “தாம் 21 ஆண்டுகள் தி.மு.க.வில் இருந்தேன்” எனக் கூறினார்.

Published on: June 13, 2026 at 10:55 pm
சென்னை, ஜூன் 13, 2026: சென்னை பனையூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவில், ஆல் இந்தியா சிந்தாரிக் பெந்தோகஸ் சபைகளின் தலைவர் பேராயர் ஜோஸ்வா இமானுவேல் தவெகவில் இணைந்தார். கடந்த 21 ஆண்டுகளாக திமுக சிறுபான்மையினர் பிரிவில் பணியாற்றிய அவர், தற்போதைய சூழலில் மக்களின் நலனுக்காகவும், திருச்சபைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காகவும் மாற்றுப்பாதை தேவைப்படுவதாகவும், திமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இல்லை என்பதே கசப்பான உண்மை எனவும் தெரிவித்தார்.
அதே விழாவில் தவெகவில் இணைந்த நகைச்சுவை நடிகர் சீனிவாசன், தமிழ்நாட்டில் தவெக ஆட்சி இனி தொடரும் என்றும், உச்ச வருமானத்தை விட்டுவிட்டு சேவை செய்யும் மனப்பான்மையை தலைவர் விஜயின் வழியில் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார். தமிழ்நாடு விரைவில் சிங்கப்பூரைப் போன்ற முன்னேற்ற மாநிலமாக மாறும் என அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தவெகவில் இணைந்தவர்களை அமைச்சர் என். ஆனந்த் மற்றும் பிற நிர்வாகிகள் வரவேற்றனர். கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு துறைகளில் இருந்து வந்தவர்கள் இணைந்திருப்பது, தவெக ஆட்சிக்கு வலுவூட்டும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
சிறுபான்மையினரின் உரிமைகள், பெண்களின் பாதுகாப்பு, போதை ஒழிப்பு போன்ற முக்கிய பிரச்சனைகளில் தவெக ஆட்சி உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என புதிய இணைந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கட்சியின் அரசியல் வலிமை மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க : ‘தமிழ்நாட்டின் ஒரு பகுதி மேகதாது’.. வியனரசு அதிரடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com