Janhvi Kapoor: “பெத்தி” படத்தின் சில ஆட்சேபனைக்குரிய காட்சிகளில் ஜான்வி கபூர் விருப்பம் இன்றி நடித்தார்” என மேக்கப்அப் ஆர்டிஸ்ட் கூறியுள்ளார்.
Janhvi Kapoor: “பெத்தி” படத்தின் சில ஆட்சேபனைக்குரிய காட்சிகளில் ஜான்வி கபூர் விருப்பம் இன்றி நடித்தார்” என மேக்கப்அப் ஆர்டிஸ்ட் கூறியுள்ளார்.

Published on: June 13, 2026 at 9:19 pm
ஹைதராபாத், ஜூன் 13, 2026: ஜான்வி கபூரின் பெத்தி திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த சர்ச்சை தொடரும் நிலையில், அவரது மேக்கப் ஆர்டிஸ்ட் சவ்லீன் கௌர் மஞ்சந்தா அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் அவர் பகிர்ந்த பதிவில், ஜான்வி சில காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்றும், தொழில்முறை எல்லையை அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.
அந்தப் பதிவில், “ஒரு நடிகையை அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களுக்காக குற்றம் சாட்டுவது எளிது. ஆனால் உண்மையான காலவரிசை வேறுபட்ட கதையைச் சொல்கிறது. ஜான்வி கபூர், சில காட்சிகளைப் பற்றி போஸ்ட்-ப்ரொடக்ஷன் நேரத்தில் கேள்வி எழுப்பியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது, பெண்களை அதிகமாக பாலியல் நோக்கில் காட்டும் பழக்கத்திற்கு எதிராக அவர் எடுத்துள்ள சமீபத்திய நிலைப்பாட்டுடன் பொருந்துகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சில காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட கேமரா கோணங்களுக்கு ஜான்வி எதிர்ப்பு தெரிவித்ததாகவும், “அவர் தொழில்முறை எல்லையை வரையறுத்தார். ஆனால் இறுதி எடிட்டில் அந்தக் காட்சிகள் நீக்கப்படவில்லை. இது நடிகை தன்னைப் பாதுகாக்கத் தவறியதல்ல; இயக்குநர், அவரது ஒப்புதலை புறக்கணித்து வசூல் எண்ணிக்கையை முன்னிலைப்படுத்தியதுதான்” எனவும் பதிவில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில், ரசிகர் குழுக்கள் பகிர்ந்த சில ஸ்கிரீன்ஷாட்களில், ஜான்வி தனது கதாபாத்திரம் குறித்த கவலைகளை மீண்டும் மீண்டும் தெரிவித்ததாகத் தெரிகிறது.
இதையும் படிங்க : ஒ.டி.டி.க்கு வந்தாச்சு லாலேட்டனின் திரிஷ்யம் 3.. எப்போது? எதில் பார்க்கலாம்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com