மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லை.. ரூ.5,000 மானியம் வழங்கிடுக.. அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss: “மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லை: உழவர்களுக்கு குறுவைத் தொகுப்புடன் ரூ.5000 மானியத்தையும் வழங்க வேண்டும்” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Published on: June 6, 2026 at 5:07 pm

சென்னை, ஜூன் 6, 2026: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (சனிக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாலும், தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்கான வாய்ப்புகள் தென்படாததாலும் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படாது என்பது உறுதியாகி விட்டது. இத்தகைய சூழலில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்யத் தேவையான உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், “கடந்த ஆண்டு குறுவை பருவத்தின் போது தான், அதற்கு முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.13 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. நடப்பாண்டில் உரிய காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாவிட்டால், குறுவை நெல் சாகுபடி செய்யப்படும் பரப்பு 3 லட்சம் ஏக்கருக்கும் கீழாக குறைந்து விடும். இதனால் உழவர்களுக்கு வருவாய் இழப்பும், தொழிலாளர்களுக்கு வேலையிழப்பும் ஏற்படும்.

இந்த பாதிப்புகளை ஓரளவுக்காவது கட்டுப்படுத்த வேண்டும் என்றால் நிலத்தடி நீரை பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்வதும், அதற்காக உழவர்களுக்கு உதவ வேண்டியதும் அரசின் கடமை ஆகும். இதற்காக காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள உழவர்களுக்கு விதைகள், உரங்கள், நுண்ணூட்ட சத்துகள் உள்ளிட்டவற்றை மானியத்தில் வழங்கும் குறுவைத் தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். கடந்த ஆட்சியில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மட்டுமே குறுவைத் தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் உச்சவரம்பின்றி அனைவருக்கும் குறுவைத் தொகுப்பு வழங்கப்பட வேண்டும்.

அத்துடன் 24 மணி நேரமும் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கவும், இடுபொருள் மானியமாக ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் வழங்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : இந்து விரோத அரசியல்.. த.வெ.க.வை சாடிய நயினார் நாகேந்திரன்!

திருச்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை.. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்க.. அன்புமணி ராமதாஸ்
Anbumani Ramadoss

திருச்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை.. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்க.. அன்புமணி ராமதாஸ்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com