தனியார் வேலைவாய்ப்பில் 75 சதவீத இட ஒதுக்கீடு.. அன்புமணி வலியுறுத்தல்!

Anbumani Ramadoss: தனியார் வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Published on: July 20, 2026 at 11:28 am

சென்னை ஜூலை 20, 2026; பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் புதிய தொழிற்கொள்கையை உருவாக்குவதற்கான கலந்தாய்வுகளை தொழிற்துறை அதிகாரிகள் தொடங்கியிருப்பதாகவும், அதில் தனியார் தொழில், வணிக நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால், அது சமூகநீதிக்கு செய்யப்படும் துரோகமாகும்.

இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமக்கப்பட்டு வருவதாலும், அரசுத் துறைகளில் ஆள்குறைப்பு செய்யப்படுவதாலும் படித்த, திறமையான இளைஞர்கள் தனியார்துறை வேலைவாய்ப்புகளைத் தான் நம்பியிருக்க வேண்டியுள்ளது. அதிலும் கூட பல தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் பல்வேறு காரணங்களால் உள்ளூர் இளைஞர்களை விட்டு விட்டு, வெளிமாநில இளைஞர்களை பணியமர்த்துகின்றன.

இந்த சமூக அநீதியைப் போக்க வேண்டும் என்பதற்காகத் தான் தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்பை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழங்க வகை செய்யும் சட்டத்தை நுறைவேற்ற வேண்டும் என்று 10 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் பயனில்லை.” என தெரிவித்துள்ளார்.

மேலும், ‘தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டு இளைஞர்களை தங்கள் நிறுவனங்களில் 75% அளவுக்கு பணியமர்த்தும் தனியார் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி வரியில் 2.5%, மின்சாரக் கட்டணத்தில் 5% மானியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த உறுதியை த.வெ.க. அரசு நிறைவேற்ற வேண்டும்’ என்றும் தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான த.வெ.க. அரசு அமைவதற்கு முதன்மைக் காரணமாக இருந்தவர்கள் இளைஞர்கள் தான். அவர்களின் எதிர்பார்ப்பு தங்களுக்கு கண்ணியமான வேலை கிடைக்க வேண்டும் என்பது தான்.

அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கான அதிகாரமும், அதற்கு வசதியாக சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதியும் இருக்கும் போது அதை நிறைவேற்றுவதில் தாமதம் செய்யக் கூடாது. தமிழ்நாட்டு இளைஞர்களின் நலனுக்கு எதிரான அனைத்துக் கருத்துகளையும் ஒதுக்கித் தள்ளி விட்டு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில் தொடங்கப்படும் தனியார் தொழில் மற்றும் நிறுவன வேலைவாய்ப்புகளில் 75 விழுக்காட்டை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கும் சட்டத்தை வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க; பெண்கள் இட ஒதுக்கீடு என்ற பெயரில் தொகுதி மறு வரையறை மசோதா.. நெல்லை எம்.பி ராபர்ட் புரூஸ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com