Madras high court: ஆம்னி பேருந்துகள் மீது போக்குவரத்து ஆணைய உத்தரவு செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Madras high court: ஆம்னி பேருந்துகள் மீது போக்குவரத்து ஆணைய உத்தரவு செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published on: June 6, 2026 at 4:54 pm
சென்னை, ஜூன் 6, 2026: சென்னை உயர்நீதிமன்றம், தனியார் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் புறப்பட வேண்டும் என்ற மாநில போக்குவரத்து ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ளது. 2024 ஜனவரி 22ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவை எதிர்த்து, தனியார் பேருந்து நிறுவனங்களும், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் வழக்குகள் தொடர்ந்திருந்தன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன், தமிழ்நாடு மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி, பேருந்து முனையம் அமைக்க மாநில போக்குவரத்து ஆணையத்தின் ஒப்புதல் கோரி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் விண்ணப்பிக்க முடியாது என்று தெரிவித்தார். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புதான் விண்ணப்பிக்க முடியும் என்பதால், காட்டாங்குளத்தூர் பஞ்சாயத்து யூனியன் விண்ணப்பிக்கலாம் என உத்தரவிட்டார்.
மேலும், குறிப்பிட்ட வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க உரிமம் வழங்கிய நிலையில், அதை தடுக்க முடியாது என்றும், தனியார் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட வேண்டும் என்ற மாநில போக்குவரத்து ஆணைய உத்தரவை ரத்து செய்தார். போரூர், சூரப்பட்டு, மாதவரம் ரவுண்டானா ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதி வழங்கப்பட்டதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
இதனால், தனியார் ஆம்னி பேருந்துகள் பயணிகளின் வசதிக்காக பல இடங்களில் ஏற்றும்-இறக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அதேசமயம், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலும் பயணிகளை ஏற்றும்-இறக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க : இந்து விரோத அரசியல்.. த.வெ.க.வை சாடிய நயினார் நாகேந்திரன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com