No Fee at Old Courtallam : பழைய குற்றாலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது; இங்கு குளிக்க கட்டணம் இல்லை.
No Fee at Old Courtallam : பழைய குற்றாலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது; இங்கு குளிக்க கட்டணம் இல்லை.

Published on: May 30, 2026 at 10:09 pm
திருநெல்வேலி, மே 30, 2026: தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா இடமான பழைய குற்றாலம் அருவி, பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்காக 8 மாதங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர், வன அலுவலர் ஆர். ராஜ்மோகன், வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் அருவிப் பகுதியை ஆய்வு செய்த பின், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். முன்பு வனத்துறை குளிப்பதற்கு நபர் ஒருவருக்கு ₹20 கட்டணம் விதித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு எழுந்ததால், மாவட்ட ஆட்சியர் கட்டணத்தை ரத்து செய்து, தற்காலிகமாக இலவசமாக அனுமதி வழங்க உத்தரவிட்டார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக, காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அருவிப் பகுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுகள் படி கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பொருட்கள், சோப்பு, ஷாம்பு, எண்ணெய், மதுபானங்கள் ஆகியவற்றை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக காவல் துறை, தீயணைப்பு துறை மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். குடிநீர், கழிவறை, உடை மாற்றும் அறைகள் சீரமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும், அருவிப் பகுதியில் இயங்கும் ஆட்டோக்களின் கட்டணமும், பயணிகள் எண்ணிக்கையும் முறைப்படுத்தப்படும். விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க : புதிய குடும்ப அட்டைகள் எப்போது கிடைக்கும்? அமைச்சர் வெங்கடரமணன் பதில்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com