இந்தியாவில் ஆசிய தொடர் ஓட்டப் பந்தயம்.. எந்தெந்த மாநிலங்களில் நடக்கிறது தெரியுமா?

Asian Relays & Indoor Championships : இந்தியா 2027 ஆசியன் ரிலேஸ் மற்றும் 2028 ஆசியன் இண்டோர் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துகிறது.

Published on: May 28, 2026 at 1:12 pm

புதுடெல்லி, மே 28, 2026: இந்தியா 2027 ஆசியன் ரிலேஸ் மற்றும் 2028 ஆசியன் இண்டோர் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தும் உரிமையை பெற்றுள்ளது. 2027 போட்டிகள் சந்தீகரில் நடைபெற, 2028 போட்டிகள் புவனேஸ்வரில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில், ஆசிய கண்டத்தின் தடகள நிர்வாக அமைப்பால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய தொடர் ஓட்டப் போட்டிகள் மற்றும் 2028-ஆம் ஆண்டுக்கான ஆசிய உள்ளரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள் இந்தியாவில் நடப்பது என தீர்மானிக்கப்பட்டது. இந்தப் போட்டிகள் இந்திய நகரங்களான சண்டிகர் மற்றும் புவனேஸ்வரில் நடைபெற உள்ளன. ஆசிய தடகள சங்கத்தின் (AAA) செயற்குழுக் கூட்டம், மே 28 முதல் 31 வரை நடைபெறவுள்ள ஆசிய U20 சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு முன்னதாக நடைபெற்றது.

ஹாங்காங்கில் நடைபெற்ற இந்த செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட உலக தடகள அமைப்பின் துணைத் தலைவர் அடில் சுமரிவல்லா, 2027-ஆம் ஆண்டு சண்டிகரில் நடைபெறவுள்ள ஆசிய தொடர் ஓட்டப் போட்டிகளையும், 2028-ஆம் ஆண்டு புவனேஸ்வரில் நடைபெறவுள்ள ஆசிய உள்ளரங்க சாம்பியன்ஷிப் போட்டிகளையும் இந்தியா நடத்தும் என்று கூறினார்.

முன்னதாக, இந்திய தடகள கூட்டமைப்பு கடந்த ஆண்டு இவ்விரு போட்டிகளையும் நடத்துவதற்கான ஏலங்களைச் சமர்ப்பித்திருந்தது என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : பாதியில் வெளியேறிய பஞ்சாப்.. மவுனம் கலைத்தார் பிரித்தி ஜிந்தா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com