ஊர்வசி ரௌத்தேலாவை கடுப்பாக்கிய ஏ.ஐ படம்.. அப்படி என்னதான் ஆச்சு?

Urvashi Rautela : பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌத்தேலா, ஏ.ஐ எனப்படும் செயற்கை தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கிய படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Published on: May 28, 2026 at 11:26 am

புதுடெல்லி, மே 28, 2026: பாலிவுட் நட்சத்திரம் ஊர்வசி ரௌத்தேலா, தன்னை ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே முன்னிலையில் மண்டியிட்டு நிற்பது போல காட்டிய ஏ.ஐ உருவாக்கிய புகைப்படத்தை கடுமையாக கண்டித்துள்ளார். இந்த போலி படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால், கடும் நடவடிக்கை எடுப்பேன் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

முன்னதாக, சமூக வலைதளங்களில், நடிகை ஊர்வசி ரௌத்தேலா மண்டியிட்டு மலர் கொடுத்து வணங்குவது போல காட்டிய ஏ.ஐ படங்கள் பரவின. அந்த படத்தில், அவர் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே முன்னிலையில் இருப்பது போல காட்டப்பட்டது. ரசிகர்கள் சிலர் அதை உண்மையான புகைப்படம் என நம்பி பகிர்ந்தனர். இந்த நிலையில், ஊர்வசி, அந்த படத்தை “முழுமையான போலி” எனக் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய ஊர்வசி, “ஏ.ஐ எனப்படும் செயற்கை தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவது, பெண்களை அவமதிக்கும் விதமாக உள்ளது; இது பெண்களின் மரியாதையை குறைக்கும் செயல்” என்றார். இதற்கிடையில், ரசிகர்கள் பலர் நடிகை ஊர்வசியை ஆதரித்து, ஏ.ஐ தொழிற்நுட்பத்தின் தவறான பயன்பாட்டை கண்டித்துள்ளனர்.

இதையும் படிங்க : சமந்தாவுக்கு பூங்கொடுத்து கொடுத்த ரசிகர்.. வீடியோ வைரல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com