கிறிஸ் கெயில் சாதனை ஜஸ்ட் மிஸ்.. 97 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி.. இருக்கை நுனிக்கு வந்த ரசிகர்கள்!

Vaibhav Sooryavanshi : வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம், ரசிகர்களை இருக்கை நுனிக்கு வரச் செய்தது. அவர் 28 பந்துகளில் 97 ரன்கள் விளாசினார்.

Published on: May 28, 2026 at 10:26 am

புதுடெல்லி, மே 28, 2026: 15 வயதான இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல் எலிமினேட்டரில் 97 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால், மேற்கிந்தியா நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் கிறிஸ் கேய்லின் ‘விரைவான சதம்’ சாதனையை முறியடிக்க முடியாமல் தவறினார்.

இன்றைய ஐ.பி.எல் எலிமினேட்டர் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் வைபவ் சூரியவன்ஷி 29 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் அவர் ப்ரஃபுல் ஹிஞ்சே பந்தில், கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார்; இந்நிலையில், கிறிஸ் கேய்லின் 30 பந்துகளில் சதம் சாதனையை முறியடிக்க வைபவ் தவறிவிட்டார்.

சூர்யவன்ஷி அவுட் ஆன பின், முல்லன்பூர் மைதானம் அமைதியாகியது. அப்போது, சூரியவன்ஷி, “நான் பந்தை நேராக அடிக்க முயன்றதால் தவறான டைமிங் ஏற்பட்டது. மூன்றாவது பீல்டர் பக்கம் அடித்திருந்தால் சதம் வந்திருக்கும்” என்று கூறினார். மேலும், அவர் தன்னையே குற்றம் சாட்டி, “சரியான ஷாட் விளையாடியிருந்தால் சாதனை வந்திருக்கும்” என வருத்தம் தெரிவித்தார்.

சிக்ஸர் சாதனை

இதற்கிடையில், 12 சிக்ஸர்கள் அடித்து, ஐ.பி.எல் சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனையை முறியடித்தார். மேலும் அவர் ஆரஞ்சு தொப்பி பெற்றார். 600க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்து, ஐ.பி.எல் வரலாற்றில் இளம் வீரராக சாதனை படைத்தார். இந்த நிலையில்,அவரது இன்னிங்ஸ் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் 243/8 ரன்கள் எடுத்தது. மேலும், வைபவ் சூர்யவன்ஷி இளம் திறமைசாலி என்பதால், எதிர்காலத்தில் பல சாதனைகள் படைப்பார் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

இதையும் படிங்க : புதிய உச்சம் தொட்ட விராத்கோலி.. டெஸ்ட்டை முந்திய ஐபிஎல் ரன்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com