ராஜஸ்தானின் ராக்கி பாய்.. குறி வைக்கும் ஹைதராபாத்.. யாருக்கு வெற்றி?

Sooryavanshi : இன்றைய நாக்அவுட் போட்டியில் ராஜஸ்தான், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

Published on: May 27, 2026 at 3:31 pm

சென்னை, மே 27, 2026: ஐ.பி.எல் 2026 இல் 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அபார வாணவேடிக்கை ஆட்டத்தால் போட்டியின் முக்கிய முகமாக மாறியுள்ளார். இவர், 568 ரன்கள் (ஸ்ட்ரைக் ரேட் 232) அடித்து, ஆரஞ்சு தொப்பியுடன் போட்டியில் முன்னிலை வகிக்கிறார்.

முன்னதாக, ஜெய்ப்பூரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக அவர் அடித்த 36 பந்துகளில் சதம், ஐ.பி.எல் வரலாற்றில் மூன்றாவது வேகமான சதமாகும். இந்த ஆட்டம் ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸின் மனதில் இன்னும் பதிந்துள்ளது.

அதாவது, ஜெய்ப்பூரில், சூர்யவன்ஷி முதல் ஓவரிலேயே நான்கு சிக்ஸர்கள் அடித்து பழிவாங்கினார். முந்தைய ஆட்டத்தில், ப்ரஃபுல் ஹிஞ்சே அவரை ‘டக்’ ஆக அவுட் செய்திருந்தார். இந்நிலையில் சூர்யவன்ஷி 15 பந்துகளில் அரைசதம், 36 பந்துகளில் சதம் அடித்து ஹைதராபாத் பந்துவீச்சாளர்களை சிதறடித்தார்.

இதற்கிடையில், கம்மின்ஸ், “சூர்யவன்ஷி போன்ற வீரர்களுக்கு எதிராக பிளான் பி, பிளான் சி தேவை” என்று ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், “சில நேரங்களில் நாங்கள் அவரை கட்டுப்படுத்தினோம், சில நேரங்களில் அவர் தப்பித்தார். அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறோம்” என்றார்.

மேலும், ஹைதராபாத், எலிமினேட்டர் போட்டியில் அவரை கட்டுப்படுத்த புதிய தந்திரங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஹைதராபாத் வெற்றி

அந்தப் போட்டியில் சூர்யவன்ஷி சதம் அடித்தாலும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அந்த ஜெய்ப்பூர் போட்டியில் 229 ரன்களை 18.3 ஓவர்களில் துரத்தி வென்றது. அபிஷேக் சர்மா மற்றும் ஈஷான் கிஷன் ஆகியோரின் அரைசதங்கள் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வெற்றியைத் தந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : புதிய உச்சம் தொட்ட விராத்கோலி.. டெஸ்ட்டை முந்திய ஐபிஎல் ரன்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com