Anbumani Ramadoss: பாட்டாளி மக்கள் கட்சி கிளை, ஒன்றிய, மாவட்ட அளவில் மறுசீரமைப்புக்கு தயாராகிறது.
Anbumani Ramadoss: பாட்டாளி மக்கள் கட்சி கிளை, ஒன்றிய, மாவட்ட அளவில் மறுசீரமைப்புக்கு தயாராகிறது.

Published on: May 27, 2026 at 4:02 pm
சென்னை, மே 27, 2026: பாட்டாளி மக்கள் கட்சி தலைமை நிலையம் சார்பில் இன்று வெளியாகியுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னையில் நேற்று (26.05.2026) செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.
இதில், கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், கட்சி வளர்ச்சிப் பணிகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், கிளை, பேரூர், நகர, ஒன்றிய, மாவட்ட அளவில் கட்சி நிர்வாகத்தை மறு சீரமைக்க இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் குழுக்களை அனுப்பி ஆய்வு செய்வதென்றும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரின் கருத்துகளைக் கேட்டறிந்து, அதனடிப்படையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து கட்சித் தலைமைக்கு குழுக்கள் அறிக்கை தாக்கல் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
குழுக்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் உரிய மாற்றங்களை கட்சித் தலைவர் மேற்கொள்வார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஈகை உணர்வால் வாகை சூடுவோம்.. வைகோ பக்ரீத் வாழ்த்து
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com