20 ஆண்டுகள் தண்டனை.. சிறைக்கு வெளியே 436 நாள்கள்.. மீண்டும் குர்மீத் ராம் ரஹீமுக்கு பரோல்!

Parole Sparks Debate : பாலியல் புகாரில் சிக்கி 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வரும் சர்ச்சைக்குரிய சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு மீண்டும் 30 நாள்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

Published on: May 26, 2026 at 3:48 pm

புதுடெல்லி, மே 26, 2026: டேரா சச்சா சௌதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், சத்வி பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறது. இந்நிலையில், அவர் மீண்டும் 30 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் சிறைக்கு வெளியே இருந்த நாள்கள் மொத்தம் 436 ஆக உயர்ந்துள்ளது.

16வது தற்காலிக விடுதலை

நீதிமன்றம் பரோல் வழங்கிய நிலையில் குர்மீத், ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ள சுனாரியா சிறையிலிருந்து காலை 6:34 மணிக்கு வெளியே வந்தார். இது அவரது 16வது பரோல் விடுதலை ஆகும். 2017 ஆகஸ்டில் சிறையில் அடைக்கப்பட்ட காலத்திலிருந்து, அவர் 406 நாட்கள் சிறைக்கு வெளியே இருந்துள்ளார்.

சட்டத்தின் அடிப்படையில் விடுதலை

ஹரியானா அரசு 2022-இல் கொண்டு வந்த சிறைக் கைதிகளின் நன்னடத்தை சட்டத்தின் அடிப்படையில் அவர் பரோல் பெறுகிறார். இந்த சட்டம், தகுதியான கைதிகளுக்கு ஆண்டுக்கு 70 நாள் பரோல் மற்றும் 21 நாள் ஃபர்லோ வழங்குகிறது.

2024-இல், டேரா மேலாளர் ரஞ்சித் சிங் கொலை வழக்கில் அவர் மற்றும் நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதற்கிடையில், 2025-இல், பத்திரிகையாளர் ராம்சந்திர சத்திரபதி கொலை வழக்கிலும் அவர் அப்பீலில் விடுதலை பெற்றார்.

இதனால், பாலியல் பலாத்கார வழக்கில் விதிக்கப்பட்ட 20 ஆண்டு தண்டனை மட்டுமே தற்போது நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கர்நாடகாவில் முதலமைச்சர் மாற்றம்? சித்த ராமையாவுக்கு காங்கிரஸ் டெல்லி தலைமை அழைப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com