Massive Ganja Seizure : சென்னையை அடுத்த தாம்பரத்தில் 170 கிலோ கஞ்சா சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Massive Ganja Seizure : சென்னையை அடுத்த தாம்பரத்தில் 170 கிலோ கஞ்சா சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published on: May 26, 2026 at 2:16 pm
சென்னை, மே 26, 2026: சென்னையை அடுத்த தாம்பரம் சுற்றுவட்டாரத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் 170 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, ஆந்திராவைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக காவல்துறையினர் மேற்கொள்ளும் தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.
வாகன சோதனை
தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் சஞ்சய் குமார் உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் குரோம்பேட்டை – திருநீர்மலை சர்வீஸ் சாலை அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை தடுத்து சோதனை செய்ததில், மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 170 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
நால்வர் கைது
இந்நிலையில், கஞ்சாவை கொண்டு வந்தவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள், பல்லா வராஹாலா பாபு, கல்லா சத்யா நாராயணா, சேனாபதி துர்கா பிரசாத், வங்காலா துர்கா பிரசாத் ஆகியோர் ஆவார்கள்.
அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நான்கு பேர்மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். கஞ்சா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க : திடுக்கிட்ட திருநெல்வேலி.. ஆண் நண்பரின் ஆசையை நிறைவேற்ற.. ச்சீ இப்படியெல்லாமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com