தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் பதில்

Tamil Nadu Schools Reopening Update : தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்தார்.

Published on: May 25, 2026 at 4:50 pm

Updated on: May 25, 2026 at 5:08 pm

சென்னை, மே 25, 2026: தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “காலநிலை மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இறுதி முடிவு எடுக்கப்படும்; காலை உணவு மற்றும் மதிய உணவு திட்டங்கள் வழக்கம்போல தொடரும்” என்றார்.

தமிழ்நாட்டில், ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், கல்வி அமைச்சகம் இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையில், அமைச்சர் ராஜ்மோகன், “கோடை வெப்பம் குறைந்தால் ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்; இல்லையெனில் தள்ளிப்போடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது கடுமையான வெப்பம் நிலவுகிறது. இந்நிலையில், வெப்பம் குறையாவிட்டால், பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்பட வாய்ப்பு உள்ளது. மேலும், பள்ளிகளில் நடைபெறும் காலை உணவு மற்றும் மதிய உணவு திட்டங்கள் வழக்கம்போல தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : விஜய் முதல்வராவதை உதயநிதி தடுத்தார்.. மாணிக்கம் தாகூர்

கடந்த ஆட்சியாளர்கள் எளிதாக எதிர்கொண்டதன் விளைவே.. மேகதாது விவகாரம் குறித்து டி.டி.வி தினகரன்!
Cauvery Water Dispute

கடந்த ஆட்சியாளர்கள் எளிதாக எதிர்கொண்டதன் விளைவே.. மேகதாது விவகாரம் குறித்து டி.டி.வி தினகரன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com