கர்நாடகாவில் முதலமைச்சர் மாற்றம்? சித்த ராமையாவுக்கு காங்கிரஸ் டெல்லி தலைமை அழைப்பு!

Karnataka Power Tussle : கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையா செவ்வாய்க்கிழமை (மே 26, 2026) டெல்லி செல்கிறார். இது அரசியல் களேபரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published on: May 25, 2026 at 1:11 pm

Updated on: May 25, 2026 at 1:15 pm

பெங்களூரு, மே 25, 2026: கர்நாடகா அரசியல் சூழலில், மாநில முதலமைச்சர் சித்தராமையா மே 26 அன்று டெல்லிக்கு சென்று காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களுடன் சந்திக்க அழைக்கப்பட்டுள்ளார். இது, அவருக்கும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் இடையேயான தலைமைப் போட்டி மற்றும் அமைச்சரவை மாற்றம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் சந்திப்பாக கருதப்படுகிறது.

அதிகார அரசியல் பேட்டி

கர்நாடகா காங்கிரஸில் சித்தராமையா – டி.கே. சிவகுமார் இடையேயான தலைமைப் போட்டி நீண்ட நாட்களாக நிலவி வருகிறது. இந்நிலையில், சித்தராமையா, “தேசிய தலைவர்கள் அழைத்தால் மட்டுமே டெல்லி செல்வேன்” என்று முன்பே தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், தற்போது அழைப்பு வந்துள்ளதால், முதலமைச்சர் பதவி தொடர்வது குறித்த தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பல எம்.எல்.ஏ-க்கள் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக உள்ளது. அந்த வகையில், இந்த சந்திப்பில் அமைச்சரவை மாற்றம் குறித்த முடிவும் எடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால், கர்நாடகா அரசியல் சூழலில் புதிய மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.

மாநிலங்களவை தேர்தல்

கர்நாடகாவில் 4 ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ளன. அதில் காங்கிரஸ் 3 இடங்களை வெல்லும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, சித்தராமையா தனது டெல்லி பயணத்தில் இதையும் விவாதிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

எஸ்.ஐ.ஆர் விவகாரம்

முன்னதாக, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது, டி.கே. சிவகுமார், “வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்படாமல் இருக்க, மக்கள் படிவங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்” என்று எச்சரித்தார். மேலும், வாக்குரிமை இழந்தால், அரசின் உத்தரவாத திட்டங்களும் இழக்கப்படும் எனவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மம்தா கட்சி மாயம்.. 1 லட்சம் வாக்குகளில் பா.ஜ.க வெற்றி.. மறுதேர்தல் முடிவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com