Praggnanandhaa Draws : ருமேனியா நாட்டில் நடந்த செஸ் தொடரில் தமிழக வீரர் பிரக்யானந்தா ஆட்டத்தை சமனில் நிறைவு செய்தார்.
Praggnanandhaa Draws : ருமேனியா நாட்டில் நடந்த செஸ் தொடரில் தமிழக வீரர் பிரக்யானந்தா ஆட்டத்தை சமனில் நிறைவு செய்தார்.

Published on: May 25, 2026 at 1:25 pm
புதுடெல்லி, மே 25, 2026: ஜெர்மனி நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டர் வின்சென்ட் கெய்மர், ருமேனியாவில் நடைபெற்ற சூப்பர் செஸ் கிளாசிக் 2026 போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். இந்தியாவின் பிரக்ஞானந்தா, இறுதி சுற்றில் அனிஷ் கிறியுடன் சமனில் முடித்தார்.
வின்சென்ட் கெய்மர் வெற்றி
வின்சென்ட் கெய்மர் இறுதி சுற்றில் நெதர்லாந்தின் ஜோர்டன் வான் ஃபோரீஸ்ட்-ஐ வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார். இவர், மொத்தம் 6 புள்ளிகள் பெற்று சாம்பியனானார். முன்னதாக அவர் 4 வெற்றி, 4 சமன், 1 தோல்வி என சிறப்பாக விளையாடினார். இந்நிலையில், சாம்பியனாகி $100,000 பரிசுத்தொகை மற்றும் கூடுதல் போனஸ்கள் பெற்றார்.
பிரக்ஞானந்தாவின் ஆட்டம்
இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, இறுதி சுற்றில் அனிஷ் கிறி-யுடன் விளையாடினார். இந்த ஆட்டம், 31-வது நகர்வில் சமனில் முடிந்தது. இதில், பிரக்ஞானந்தா, கிறி, வான் ஃபோரீஸ்ட், வாசியர்-லக்ராவ், மற்றும் டீக் ஆகியோர் 4.5 புள்ளிகளுடன் இணைந்து இரண்டாம் இடத்தில் முடித்தனர். மற்ற வீரர்களை பொறுத்தமட்டில், பாபியானோ காருவானா 5.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பெற்றார். வெஸ்லி சோ மற்றும் சிந்தரோவ் தலா 5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இணைந்தனர்.
அலிரெசா ஃபிரூஜா போட்டியின் ஐந்தாவது சுற்றுக்குப் பிறகு விலகியதால் கடைசி இடத்தில் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கிரிக்கெட் மைதானத்திலே மரணம்.. கர்நாடகாவில் பரிதாபம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com