வந்துட்டேனி சொல்லு.. திரும்பி வந்துடேன்னி சொல்லு.. அமிதாப் டா.. ரசிகர்கள் உற்சாகம்!

Amitabh Bachchan Sunday darshan : பாலிவுட் பெரிய நட்சத்திரம் அமிதாப் பச்சன் ஞாயிற்றுக்கிழமை தனது இல்லத்தில் ரசிகர்களை சந்தித்துப் பேசினார்.

Published on: May 25, 2026 at 1:46 pm

புதுடெல்லி, மே 25, 2026: பாலிவுட் நாயகன் அமிதாப் பச்சன், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனது இல்லத்தில் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினார். ஞாயிற்றுக்கிழமை தரிசனம் என்பது அமிதாப் பச்சனின் பல ஆண்டுகளாக தொடரும் வழக்கம். இதற்கிடையில், இந்த வாரம் மருத்துவமனை வதந்திகள் காரணமாக அவர் வரமாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 83 வயதான பிக் பி புன்னகையுடன் ரசிகர்களை சந்தித்தார்.

நேற்று அமிதாப் பச்சன், வெள்ளை நிற உடையில், கைகளை அசைத்து, புன்னகையுடன், ரசிகர்களுக்கு பறக்கும் முத்தங்கள் அனுப்பினார். முன்னதாக, கடந்த வாரம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்திகள் பரவின. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நேரில் தோன்றியதால், அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

முன்னதாக, நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஜல்சா பங்களா முன்பு கூடினர். இதற்கிடையில், சிலர் வெப்பத்தால் மயங்கி விழுந்தாலும், உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அங்கு கூடியிருந்த ரசிகர்கள், “அவரது புன்னகை எங்களுக்கு நிம்மதி அளித்தது” என்று தெரிவித்தனர். அமிதாப் பச்சன் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வந்த ‘வேட்டையன்’ என்ற படத்தில் நடித்தார். அதற்கு அதற்கு முன், ‘கல்கி 2898 AD’ படத்தில் அஷ்வத்தாமா கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதற்கிடையில், அவர் அடுத்த பாகத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நான் ஜிகாதியா? என் வாழ்க்கையை போச்சு.. திரிஷ்யம் பட நடிகை ஆதங்கம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com