Cricketer Collapses : கர்நாடகாவில் கிரிக்கெட் வீரர் ஒருவர் கிரிக்கெட் மைதானத்திலே மரணம் அடைந்தார்; இது அங்கிருந்தவர்கள் மத்தியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Cricketer Collapses : கர்நாடகாவில் கிரிக்கெட் வீரர் ஒருவர் கிரிக்கெட் மைதானத்திலே மரணம் அடைந்தார்; இது அங்கிருந்தவர்கள் மத்தியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published on: May 25, 2026 at 12:32 pm
பெங்களூரு, மே 25, 2026: கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கத்தின் லீக் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, முன்னாள் ரஞ்சி வீரர் எஸ்.எல். அக்ஷய் (39) மாரடைப்பால் உயிரிழந்தார். 2014-15 ரஞ்சி கோப்பையை வென்ற கர்நாடகா அணியின் உறுப்பினராக இருந்த அவர், பயிற்சியாளராகவும் பல இளம் வீரர்களை உருவாக்கியவர் ஆவார்.
போட்டி நடுவே ஏற்பட்ட துயரம்
சப்பையர் கிரிக்கெட் கிளப் சார்பில் விளையாடிய அக்ஷய், 4 ஓவர்கள் வீசிய பின் ஸ்லிப் பகுதியில் பீல்டிங் செய்தார். இந்நிலையில், திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மைதானத்தை விட்டு வெளியேறி, பெவிலியன் அருகே ஓய்வெடுத்தார்.
இதற்கிடையில், தண்ணீர் குடித்து, வாழைப்பழம் சாப்பிட்ட பின் திடீரென மயங்கி விழுந்தார். இந்நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும், வழியிலேயே உயிரிழந்தார். கர்நாடகாவில் ஷிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த அக்ஷய், வேகப்பந்து வீச்சாளராக விளங்கினார். 2014-15 ரஞ்சி கோப்பை வென்ற கர்நாடகா அணியில் உறுப்பினராக இருந்தார். இவர், 2012-13 சயீத் முஷ்தாக் அலி டிராபி-யில் கடைசியாக கர்நாடகா அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 2026 ஐ.பி.எல். போட்டியில் அர்ஜுன் அறிமுகம்.. முடிவுக்கு வந்த காத்திருப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com