கஞ்சா வியாபாரத்தில் சின்ன சின்ன பெண்கள்? போலீஸ் விசாரணையில் பகீர்!

Minor Girls Used in Cannabis Trade : திருநெல்வேலியில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டதாக இளம் பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: May 24, 2026 at 5:00 pm

திருநெல்வேலி, மே 24, 2026: திருநெல்வேலியில் சிறுவயது பெண்களை குறிவைத்து கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 12 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போலீசார் ரோந்து

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியில், காவல் ஆய்வாளர் சங்கர நாராயணன் தலைமையில் போலீசார் ரோந்து சுற்றிவந்தனர். அப்போது, சடையப்பபுரம் பகுதியில் கஞ்சா பதுக்கி விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. இதற்கிடையில், சந்தேகத்தின் பெயரில் போலீசார், சங்கீதா (48) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள். இதில் அவரிடம் 12 கிலோ தடை செய்யப்பட்ட கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் போலீசாரால் பவர் சங்கீதா கைது செய்யப்பட்டார். மேலும், அவரது கூட்டாளிகள் ஆர்த்தி (22) – அதே பகுதி, விஜயா (19) – சடையப்பபுரம், ரசூல் பாத்திமா (40) – திருநெல்வேலி பேட்டை, சௌந்தரபாண்டியன் (63) – குஜராத், நிஷா (55) – மும்பை மற்றும் இசக்கிமுத்து (25) – வீரவநல்லூர் ஆகியோரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கஞ்சா விற்பனையில் பெண்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அதிலும் குறிப்பாக, கஞ்சா விற்பனைக்கு இளம்பெண்கள் குறிவைத்து பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்கள் என்றால் போலீசாருக்கு எளிதில் சந்தேகம் வந்துவிடும் என்ற நிலையில், இந்தத் தொழிலில் இளம் பெண்களை இவர்கள் பயன்படுத்தி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : பழனி தாலுகா எஸ்.ஐ பணியிடை நீக்கம்.. பகீர் பின்னணி தகவல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com